படைத்த ரப்பில் ஆலமீனின் படைப்புகளால் எண்ணற்ற பழ வகைகள் உலகில் விளைகின்றன.
இறைவனின் வேதமான திரு குர்ஆனில்…
.. …..வித விதமான கனிகளையும் உற்பத்தி செய்கின்றான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இவற்றில் பெரும் சான்று உள்ளது.
(அல்குர்ஆன்:16;11.)
என்று இறைவன் தெரிவிக்கிறான்.
அப்படி விளைகின்ற பழங்களில் மதிப்பு மிக்கவைகள் பல இருக்கின்றது.
சுவையில், மனத்தில், நிறத்தில் என இல்லாமல் மருத்துவத்திலும் மிகவும் முக்கியமான இடத்தையும் பல வகையான பழங்கள் பெற்று இருக்கின்றன.
சில பழங்களுக்காக காத்திருந்தும் வாங்கி உண்ணுகின்ற வழக்கமும் நடைமுறையில் இன்றும் இருப்பதை கேட்க மட்டும் இல்லாமல் பார்க்கவும். நம்மால் முடிகிறது.
அப்படி பட்ட பழ வகைகளில் ஒன்று தான் துரியன் என்ற பழம்!
இந்த பழத்திற்கு முள்நாறி, டுரியான்’, `டுரேன்’… என பெயர்கலும் இருக்கிறது.
இந்த பழத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
உலகில் இந்த துரியன் பழங்களின் தலைநகராக தாய்லாந்து கருதப்படுகிறது.
உலகின் ஆண்டு தோறும் நடைபெறும். பழங்களுக்கான திருவிழாவில் தாய்லாந்து நாட்டில் சந்தாபுரி என்ற இடத்திலும் , நமது தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பழக்காட்சியிலும் முக்கிய பழமாக துரியன் இடம் பெறுகிறது.
பலாப்பழத்தைப் போலத் மேல் தோல் முள்ளு முள்ளாக இருக்கும். ஆனால் அளவில் சிறியதாக தான் இருக்கும்.
அதிகபட்சமாக 7 சுளைகள் வரை தான் காணப்படும். இந்தப் பழம் மரத்திலேயே தான் பழுத்து கீழே விழும். மற்ற பழங்களை போல பறித்து வைத்து பழுக்க வைக்க முடியாது.
இதன் இலைச்சாறுகள் தோல் நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. பசுமையான இளம் தளிர்கள் மற்றும் தண்டுகள் சாலட் செய்தும், இப்பழத்திலுள்ள கொட்டைகளைப் பலாக்கொட்டைகளைப் போல வேக வைத்தும், வறுத்தும் பலர் சாப்பிடுட்டும் வருகின்றனர்.
இப்பழத்திற்குல் இருக்கும் இண்டோல் என்ற ரசாயனப் பொருள் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் இப்பழத்தை உண்டால் உடல் சுகவீனம் நீங்கி உடல் சுகம் பெறுவர் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
அத்துடன் இப்பழத்திற்கு ஆண்களின் வீரியத்தன்மையையும், விந்தணுக்கள் குறையையும் போக்குகின்ற ஆற்றலும் குறைந்துள்ள அணுக்களின் எண்ணிக்கயையும் அதிகரிக்கவும் செய்ய வல்லது.
பெண்களின் “ஈஸ்ட்ரோஜென்’ என்ற ஹார்மோன் சுரப்பியை இப்பழங்கள் அதிகரிக்க செய்து பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.
இவைமட்டுமின்றி மலச்சிக்கலை போக்கி செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும். கண்களின் பார்வை நரம்புகளை பலப்படுத்தும்.
கால்சியம், மாங்கனீஸ், கரோட்டின், கொழுப்பு, இரும்பு, கார்போஹைட்ரேட், தாமிரம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், மக்னீசியம்..போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றனவாம்.
துரியன் பழத்தில் பி வைட்டமின்கள், வைட்டமின் சி, தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஃபைபர் உள்ளிட்ட ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளது என்றும்
சொல்கின்றனர்.
மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து காணப்படுபவர்களும் வாரம் இரண்டு முறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
நமது உடலில் உள்ள இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது.
அப்படி பட்ட கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும் நம்மை இந்தபழங்கள் காப்பாற்றும்.
துரியன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கதைத் தடுக்கிறது.
இப்படி பட்ட பல பலன்கள் கிடைக்கும் இந்த பழத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு உலக அளவில் உள்ளது.
இந்தத் துரியன் பழம் நமது தமிழகத்தில் மலைகளின் அரசியான நீலகிரியிலும், கர்நாடகாவிலும் விளைவது நமக்கு பெருமையளிக்கும் செய்தியாக மட்டும் இல்லாமல் உண்டு பயன்பெறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பர்லியார் மற்றும் கல்லார் பழப்பண்ணைகளில் துரியன் பழம் விற்பனைக்கு காணப்படுகிறது.
படைத்த ரப்பிள் ஆலமீனின் ஆற்றலால் ஒவ்வொறு பருவங்களில் கிடைக்கின்ற பழங்களை உண்டு….. நாம் வாழ்ந்தோம் என்றால் நம் உடலில் ஆரோக்கியம் முறையாக கிடைக்க பெற்று நாமும் ஆரோக்கியமாக வாழ்ந்திட முடியும்… இறைவன் அருளால்., என்பதை யாரும் மறக்க கூடாது.