Categories
articles

விழித்து கொள்வோம்
—————————————-
கவிஞர்.
எம். நூருல் அமீன்.

ஏதோதோ தள்ளுபடி
எல்லாவற்றிற்கும் தள்ளுபடி
பண்டிகை கால தள்ளுபடி
புது புது தள்ளுபடி

விதவிதமான தள்ளுபடி
எல்லா பொருள்களுக்கும் தள்ளுபடி.

தக்காளிக்கும் தள்ளுபடி, தங்கத்திற்கும் தள்ளுபடி.
இங்கு எங்கு என இல்லாமல் எங்குமே தள்ளுபடி

அழிந்து போகும்
பொருளுக்கெல்லாம் தள்ளுபடி,
கறைந்து போகும் பொருளுக்கு கூட தள்ளுபடி.

கண்ணில்
கண்டதற்கெல்லாம் தள்ளுபடி.
மனித மனத்தை
பக்குவம் படுத்தும்
புத்தகங்களுக்கு எங்குமே
கிடைப்பதில்லை தள்ளுபடி.

ஆண்டுக்கு ஒரு முறை
அபூர்வமான தள்ளுபடி.
புத்தக திருவிழாவில்
கிடைக்கின்ற பிரமாண்ட
பத்து சதவீதம் தள்ளுபடி

விலை கேட்டு ,
திரிந்தாலும் எங்குமே கிடைப்பதில்லை
நிறைவான தள்ளுபடி,

மலிவு விலையில்
ஏதேதோ தருகின்ற அரசாங்கம்,
புத்தகங்களையும்
கிடைக்க செய்தால்
அது மாபெரும் சரித்திரம்.

தவறினால் அறிவொளி பரவாமல் உலகே
இருண்டு விடும்.

அரசே கொஞ்சம்
விழித்துக்கொள்.
உலகம் இருள்
படியாமல் காத்துக்கொள்.

நேசத்துடன்
எம். நூருல் அமீன்
சென்னை.1.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Calendar

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Categories

Recent Comments