மாற்று மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமில்லாமல் ஆங்கில மருத்துவர்களும் இன்று நம்மிடம் உள்ள நோய்களுக்கு உணவு முறைகளும் காரணமாகிறது என்று கூறுவதை காண முடிகிறது. அதற்க்காக நியூட்ரிசன் & டயட்டிரிசன் போன்ற பிரிவுகள்
சகல வசிதிகளுடன் உள்ள மருத்துவ மனைகளில் முதல் சாதாரண கிளினிக் வரை
இன்று பாரக்க முடிகிறது.
இயற்கையின் மாற்றங்களின் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு பலர் பலவிதமாக பாதிக்க பட்டு தான் வருகின்றோம்.
மழை வெயில் பணி மற்றும், குளிர் காலங்களில்
அந்த சூழ்நிலைக்கு ஏற்ப உணவுகளை நாம் உண்டு வந்தால் ஏற்படுகின்ற சின்ன சின்ன தொந்தரவுகளில் இருந்து நாம் சிக்காமல் வாழ முடியும் என்று நம் முன்னோர் சொல்லியுள்ளதை எப்பொழுதும் மறக்க முடியாது.
ஒவ்வொரு வருடமும் வெயில் காலத்தில் அதனுடைய தாக்கம் அதிகரிப்பதும் குளிர் காலங்களில் கடுமையான குளிரால் பாதிப்பும் இருக்க தான் செய்கிறது.
அப்படி இருக்கின்ற இந்த குளிர் மாதங்களில் நம்மில் அதிகமான நபர்களுக்கு சளி இருமல் ஏற்படுவது மிகவும் சாதாரணமாக உள்ளது.
அதற்க்காக மருந்து எடுத்து கொண்டாலும் பயன் இல்லாமல் போய் மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் மாற்றி மாற்றி
பார்க்க தான் செய்கிறோம்.
நமது வீட்டிலியியே அதை போக்கி கொள்ளும் அளவுக்கு உள்ள உணவு முறைகளை சிலர் கண்டு கொள்ளாமலேயே வாழ்க்கின்றோம்.
அப்படி இல்லாமல்
சளி,இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் நம் சமையல் அறை மருந்துகளை இந்த தொடரில் பார்ப்போம்.
நமக்கு சளி பிடித்திருக்கும் போது நாக்கிற்கு ருசி தெரியாமல்போய்விடுகிறது.
வழக்கமாக உள்ள உணவுகளை சாப்பிட பிடிக்காது. காரம் உள்ள ஜங்க் புட்ஸ் உணவுகளின் மீதே ஆர்வம் அதிகமாக இருக்கும்.
கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி போன்ற வேர்க் காய்கறிகள் இந்த நாட்களில் சிறந்தது.
இதுபோன்ற அதிக நார்ச்சத்துமிக்க காய்கறிகள் செரிமானத்தை எளிதாக்கும்.
குளிர்காலத்திற்கு ஏற்ற ஒரு உணவு வகை என்றால் அது சூப். அதுவும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் சூப்கள் தான். அது நமது உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.
சீரகம், லவங்கப்பட்டை மற்றும் இஞ்சி போன்ற மசாலா பொருட்ககளும் இந்த குளிர் காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நீர்ச்சத்து உள்ள காய்கறிகளான சுரைக்காய், வெண்பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்கள் தவிர்ப்பது நல்லது.
சளியை உடலில் அதிகரிக்க வைக்கும் பால், தயிர் மற்றும் சர்க்கரை போன்றவை, சாக்லேட், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் உண்பது கூடாது.
பருப்பு வகைகளில் பாசிப்பயிறு குளிர்ச்சியானது அதனையும் இப்பொழுது தவிர்ப்பது நல்லது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்தது. மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவதும் நல்லது.
பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர் காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.
தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.
மிளகு ஒரு அற்புதமான மருத்துவ உணவுப்பொருள் சளி பிடித்தவர்களுக்கு மிளகு ரசம், தூதுவளை ரசம், மணத்தக்காளி வற்றல் போன்றவை சாப்பிடுவதால் சீக்கிரமாக சளி சரியாகும்.
மோர் சளியை சரிசெய்யும். மோர் தாராளமா சாப்பிடலாம். அது சளியை குறைக்க உதவும்.
அடிக்கடி தும்மல், தொடர் தும்மல், மூக்கடைப்பு, நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக் கொள்வது போன்றவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை நமக்கு சொல்வதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
குளிர் காலங்களில் காலை சூடாக தேநீர் குடிப்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த
பழக்கமாகும்.
அவ்வாறு சூடாக குடிக்க ஆரோக்கியமாக வாழ
நம் முன்னோர்கள் நமக்கு சொல்லியுள்ள ஆரோக்கியம் தரும் மூலிகை காப்பியினை வீட்டிலேயே செய்து பருகி பயன் பெறுவோம்.
மூலிகை காப்பி மழைக்காலத்தில் தினமும் குடித்து வந்தால், நோய்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்தும்
குளிரால் ஏற்படும் பாதிப்புக்கு உடனடி நிவாரணம் கிடைத்தும் . நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தும் சுறுசுறுப்புடன் புத்துணர்ச்சியையும்பெறலாம்.
மூலிகை காப்பி செய்ய தேவையான_பொருட்கள்
சீரகம்,மிளகு,
சுக்கு பொடி சம அளவு,
மல்லி 2 பங்கு,
கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு.
எடுத்துள்ள பொருட்களை பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து
அதில் பொடி செய்து வைத்துள்ள மூலிகை பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து கொண்டு மற்றும் கருப்பட்டியை தேவை யான அளவு சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதனை இறக்கி வடிகட்டி தேவைப்படும் சூட்டில் எடுத்து கொண்டால்
ஆரோக்கியமான மூலிகை காப்பியை சுவையுடன் பருகலாம்.
இந்த சுவையான காப்பியால்
சளி, இருமல், தொண்டைப்புண், கரகரப்பு, தொண்டைக்கட்டி கொள்ளுதல்
போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். என்பதை மறக்காமல் எல்லோருக்கும் சொல்லி வைப்போம். சமூக நீதி முரசு இதழை தேசம் எங்கும் படிக்க வைப்போம்.