நாடு, இனம், மதம் ஜாதி, மொழி போன்ற பல வித வேறுபாடுகள் எதுவுமே இன்றி உலகம் முழுவதும் மக்களிடையே வெகு வேகமாக பாதிப்படைய செய்வது,
நோயும் வறுமையும் தான்.
அவைகளை நம்மிடம் நெருங்காமல் தடுப்பதற்கு
பகுத்தறிவு என்னும் விழிப்புணர்வு கட்டாயம் எல்லோருக்கும் தேவை.
அந்த அற்புத உணர்வு இருந்தால் தான் நாம் யாராக இருந்தாலும் மனிதனாக நலமாகாவும் அதனால் உண்டாகும் சுகத்தாலும் நம்மால் வாழ முடியும்.
உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியம் என்பதற்கு குடுக்கின்ற விளக்கம்
எதுவென்றால் எவர் ஒருவர் உடலாலும் உள்ளத்தாலும் சமுகத்தாலும்
ஆன்மீகத்திலும் குணநலத்தாலும் ஆரோக்கியமாக இருக்கிறாரோ அவரே ஆரோக்கிய மான மனிதர் என்று சொல்கிறது.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால். …
ஆரோக்கியம் தான் அனைத்திற்கும் அவசியம் என்பதை அனைவரும் புரிந்து வாழ வேண்டும்.
நாம் வாழும் வீட்டில் இருந்து தான் நமது வாழ்வின் அனைத்தும் குறிப்பாக ஆரோக்கியம் துவங்குகிறது.
எனவே நாம் உன்னும் உணவு, உறங்கும் அளவு… உழைக்கும் உழைப்பு…. என அனைத்தையும் முறைபடுத் திட வேண்டும்.
சமையல் அறை என்பது வெறும் சமைக்கும் அறை மட்டும் இல்லை. அது ஆரோக்கியம் கிடைக்க போகும் அற்புத அறை.
அதில்….ஆரோக்கியத்தை நாம் பெற வேண்டும்…
நாவுக்கு அடிமையாகி வித விதமாக சமைத்து நோயுக்கு அடிமையாகி விட க்கூடாது.
சமையல் அறையில் உள்ள பொருட்களின் அறுமைகளை தெரிந்து அதனை முறையாக பயன்படுத்தி நோய் இன்றி வாழ முயற்சி செய்ய வேண்டும்.
இறைவனால் படைக்கப்பட்ட உண்வு பொருட்களில் உடலுக்கு தேவையான சக்திகளும் நம் நாவுக்கு பிடித்த சுவையும் மணமும் இருக்கின்றது.
அவைகளை தெரிந்து கொண்டு பயன் பெற்று வாழ வேண்டும்.
அன்றாடும் ஒரு வேளையாவது தினமும் இயற்கை உணவு களை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு இருக்க வேண்டும்.
அது நம் ஆரோக்கியத்தை அதிக படுத்தி நம்மை நோயின்றி வாழ வைக்கும்.
தானிய உணவுகளை உண்ணுகின்ற வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
நாம் விரும்புகின்ற தானியங்களை கழுவி சுமார் 6 மணி நேரம் ஊற வைத்து பின்பு அதனை ஈரமான துணியில் 8 முதல் 9 மணி வரை சுற்றி வைததால் அற்புதமாக
அது முளைவிட்டு இருக்கும்.
இந்த தானியமானது மிகவும் ஆரோக்கியத்தையும் நிறைய சக்தியையும் நமக்கு தரும்.
நம் சமையல் அறையில் இருக்கின்ற
பச்சைப்பயறு, கொண்டக் கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, கொள்ளு மற்றும் உளுந்து போன்ற தானியங்களை முளைக்கச் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
இந்த உணவுகளை உண்பதன் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல சக்திகள் கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் கிடைக்கும்.
உள்
சுருக்கமாக
பச்சைப்பயிரை முளைக்கட்டி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
சர்க்கரையின் பாதிப்பு அதிக அளவில் இல்லாமல் கட்டுப்பாட்டில் இருக்க. செய்யும்.
அவைகளை சிலதை பற்றி சமூக நீதி முரசின் வழியாக
தெரிந்து கொள்வோம்
எள்ளை முளைகடடிய பிறகு சாப்பிட்டால் இலைத்தவர்களின் உடல் பெருக்கும் கண்பார்வை குறைவாக இருந்தால் அது சரியாகும்.
கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் முளை கட்டி சாப்பிட்டால். சக்தி அதிகரித்து உடல் அசதி இல்லாமல் ஆரோக்கியம் பெற்று கொள்ளலாம்.
பிரசவித்த தாய் மார்களுக்கு
முளைவிட்ட கறுப்பு உளுந்தை சாப்பிட வைத்தால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
உடல் பெருத்த வர்கள்
முளைவிட்ட கொள்ளை சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்..
அதிக எடையால் ஏற்பட்ட மூட்டுவலியும் சரியாகும்.
வளரும் குழந்தகளுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் சத்தான உணவு கட்டாயம் தேவை.
அப்படி சத்து அதிகம் உள்ள உணவுகளில் சிறுதானியம் முக்கிய இடம் வகிக்கிறது.
சிறுதானியங்கள் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் ஆகும்.
அப்படி பட்ட சிறப்புகள் பெற்றவைகளை நாம் தெரிந்துகொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கம்பு- உண்டு வந்தால் அது சருமத்தின் அழகுக்கு பயனாகும். பார்வைத்திறன் அதிகரிக்கும்.
. உடலில் உள்ள வெப்பம் குறையும். வயிற்றில் உள்ள புண்களைக் குணப்படுத்தும். ப
தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.
திணை இதயத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மனநிலையை அமைதிப் படுத்தும்.
ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு எலும்புகளை உறுதிசெய்யும். இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி, உடல் வெப்பத்தையும் குறைக்கும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.
வரகு – உடல் எடையைக் குறைக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி குறையும் . சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.
இன்னும் இது போன்ற பல சக்தி யுள்ள சமையல் அறை
உணவுகளை தொடர்ந்து நாமும் தெரிந்து கொள்வோம
இன்ஷா அல்லாஹ்.