ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் பொழுது நாம்
மேற்கொள்ளும் ஒழுக்க நெறிகளை கடைபிடித்தும்
உண்ணும் உணவின் பயன்களை தெரிந்தும்,அதனை பேணி முறையாய் வாழ்வதும் நோன்பின் மாண்பு ஆகும்.
நோன்பு கடைப்பிடிப்பதால் நமக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைப்பதுடன், நம்
உடலுக்கும் மனதுக்கும் பல விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பதில் யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் இருக்காது..
ரமலான் ஒரு டீடாக்ஸ் ஆகும். மருத்துவர்களின் கூற்றுப்படி, நோன்பு நம் உடலின் உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. நமது செரிமான அமைப்பு அனைத்தும் சரியாகி, உணவின் ஊட்டச்சத்துக்களை உடல் உறுப்புகள்
எடுத்து கொள்கிறது.
நோன்பு கடைப்பிடிப்பதால்
உடலில் பல வருடங்களாக தேங்கியுள்ள நச்சுக்களும் கூட வெளியேற்றப் படுகின்றது .
நோன்பின் மூலம் குடலில் ஈரப்பதம் குறைவடைவதால் குடற்புண்களும் எளிதில் குணமடைகின்றன.
பதினொரு மாத காலமாக தொடராக இயங்கிக்கொண்டிருந்த நம் உடல் உறுப்புகள் நோன்பு காலங்களில் ஓய்வெடுப்பதோடு, சக்தியை சேமித்து, உடலின் ஏனைய செயற்பாடுகளுக்கும் அதனை வழங்கி அவற்றின் செயற்பாட்டைத் தூண்டுகின்றது.
நோன்பின் போது உடலில் என்டோபீன் (Endorphin) எனும் திரவம் சுரக்கிறது. இது நமது சிந்தனையை தூய்மையாக்குவதோடு, எதிர் மறை சிந்தனை (Positive thinking) ஐயும் ஏற்படுத்துகிறது” என்று மருத்துவ ஆராய்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
ரமளான் மாதத்தில் உணவுகளை நாம் முறையாக உட் கொன்டாலே நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முறையாக கிடைத்துவிடும்.
நம்பிக்கை யாளர்களே,
நல்லவற்றை உண்ணுங்கள்
உங்களுக்கு வழங்கியதற்கு நீங்கள் நன்றியுள்ளவராக இருந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்
திரு குர்ஆன் (2:172)
என்ற இறை வசனத்தை சிந்தித்துப் பார்ப்போம்.
நோன்பாளி
சஹர் உணவின் பரக்கத்தை இழந்து விடகூடாது!
“நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் பரக்கத் (அல்லாஹ்வின் அருள் வளம்) இருக்கிறது!’
என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்காக
சஹர் உணவை விடாமலிருப்பது நோன்பாளிக்கு அவசியமாகும்.
பகல் நே வேலைகளுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு
சஹர் செய்வது இறை விசுவாசிக்கு கட்டாயமானதாகும்!”.
. நோன்பு காலத்தில்
பேரிச்சம் பழம்., வெள்ளரிக்காய், திராட்சை
அத்திப்பழம்,
தர்பூசணி, மாதுளை.
பீட்ரூட், ஆலிவ்,
பால். தயிர், பாலாடை, முட்டை, நெய், கடல் பாசி, மீன், இறச்சி மற்றும் பிற பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
• இந்த உணவுகள்
நம் உடலுக்குத் தேவையான
ஆற்றலை மேம்படுத்துவதில் சிறந்ததாக இருக்கிறது.
திராட்சை, முலாம்பழம்,
தர்பூசணி போன்ற நீர் சத்து அதிகம் உள்ள பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
தர்பூசணி ஒரு சிறந்த உணவு. இதில் 92% தண்ணீர் உள்ளது
வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைய உள்ளன.
ரமலான் காலத்தில் நோன்பாளி நீர்ச்சத்துடன் இருப்பது மிக மிக முக்கியம்.
உடலில் நீரிழப்பைத் தடுக்க
ரமலானில் நமக்கு
நீர் சக்தி மிக முக்கியமானது ஆகும்.
அதனால்
தலைவலி, இரத்த சோகை,
மலச்சிக்கல் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்றவைகள் ஏற்படாமலும் அது
பாதுகாத்து கொள்ளும்.
இஃப்தார் வேலையில் தண்ணீர், பேரித்தம், பால், கனி வகைகள், பழச்சாறு, கஞ்சி, சூப், கடல்பாசி போன்றவற்றையே அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கஞ்சியில் அதிக சத்துகள் இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொன்றும் மூலிகை கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கஞ்சி என்றாலே நீர் போல திரவ நிலையில தான் இருக்கு வேண்டும்.
அப்பொழுது தான் வயிறு எளிதாக செரிமானம் ஆகி உடலுக்கு தேவைப்படும் சக்திகளை குடுத்து களைப்பை போக்கும்.
குறிப்பாக உப்பு, காரம் மற்றும் கொழுப்பு வகையான உணவுகளையும்
பொரித்த, தாளித்த உணவுகளையும் தேநீர், காபி, கலர்கள் நிறைந்த சுவையூடட்டிகள் சேர்க்கப்பட்ட , அதிக இனிப்பான பண்டங்களும், குளிர் நிறைந்த டின், பாட்டில் பானங்கள். அதிக சூடான மற்றும் காரமான உணவுகளையும் தவிரப்பதும் நல்லது..
இவ்வாறான உணவு வகைகளை முறையாக உண்டு ரமளானில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும்
கடைபிடித்து வாழ்ந்தொமே யானால் வாழ்வில் நிமதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு சிறந்த வழியை
உருவாக்கும்.
சஹரும்… இஃப்தாரும்…
ஆரோக்கியமானதாக இருந்தால்…..
வருடம் முழுவதும்….
.ஆரோக்கியமே.
இன்ஷா அல்லாஹ்…,
நேசத்துடன்.
Dr. எம். நூருல் அமீன்,