புத்தகம்….
இதயங்களில் யாருக்கும் தெரியாமல் பேசும்…
யாரிடமும் சொல்லாமல் கவலைகளை தீர்த்து வைக்கும்….
மன பாரங்களை இறக்கி வைக்கும்,
மன குழப்பங்களுக்கு
நல்ல யோசனை
வழங்கும்….
இனிமேலாவது….
உங்களின் வீட்டில்
புத்கங்களுக்கும்
கொஞ்சும் இடம் குடுங்கள்….
கிழிந்த துணிகளுக்கு இடம் தரும் நீங்கள்
புத்தகம் வைக்க்க
ஏன்
இடம் தர மறுக்கிறீர்கள்.
உடைந்தபோன
பழைய பொருட்களுக்கு
இடம் இருக்கிற
உங்கள்
வீட்டில்
புத்தகம் வைக்க
இடம் தர
ஏன்
வெறுக்கின்றீர்கள்.
போட்டு கிழிக்கின்ற
செருப்புக்கு கூட
இடம் ஒதுக்கும் வீட்டில்
வாழ்க்கையை
செதுக்கும் புத்தகத்திற்கு
ஏன்
இடம் தர மறுக்கிறீர்கள்….
புத்தகங்களை
வாசிக்க விடுங்கள்
வாசிப்பவர்களை
கொஞ்சம்
சிரிக்க விடுங்கள்….
நேசத்துடன்
எம். நூருல் அமீன்
சென்னை.1