தனி மனித வெற்றியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெ ன்றாலும் ஒரு தேசத்தின் வெற்றியை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும்அங்கு
ஆரோக்கியம் தான் பெரும் பங்கு வகிக்கிறது.
ஏனெனில் ஆரோக்கியம் தான்
ஆணிவேர். அது இல்லாமல் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய் விடும்.
ஒரு மனிதனின் ஆரோக்கியம் தான் அவனை அவனின் இலட்சியத்தை நோக்கி உழைக்க செய்யும் .ஆரோக்கியம் இல்லாத ஒருவரால் சுறுசுறுப்பாக செயல் பட முடியாது.
ஒரு தேசத்தின் முன்னேற்றமும் அங்கு வாழுகின்ற மக்களின் ஆரோக்கியத்தை வைத்து தான் பிரதிபலிக்கும்.
இதற்க்கு உதாரணமாக நாம் சீனா தேசத்தை பார்த்து புரிந்து கொள்ள முடியும்.
அந்த தேசம் சுதந்திரம் பெற்ற உடன் அன்றைய அந்நாட்டின் அதிபர் மாவோ அவர்கள் அந்த நாட்டில் அரசு மருத்துவமனைகளில்
பாரம்பரிய மருத்துவ முறையினை தான் அங்கீகாரம் அளித்து
பொருளாதார பின்னடைவில் இருந்து சீன தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றார்.
மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் தான் அது அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும் அதுவே தேசத்தின் முன்னேற்றத்தையும் உருவாக்கிட முடியும்.
நமது வருமானத்தில் செலவினங்கள் குறைவாக இருந்தால் தான் நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். மட்டுமின்றி
அது சேமிப்புக்கு வழி காட்டும் .
வருமானத்தில் பெரும் பங்கு மருத்துவ செலவுக்காகி விட்டால் அங்கு வறுமை தான் உண்டாகும்.
இன்று ஏற்படும் எதிர்பாராத செலவீனங்களில் மருத்துவமே முக்கிய இடம் வகிக்கிறது.
நாம் நமது வீட்டில் சமயலுக் காக வைத்துள்ள பொருட்களை கொண்டேநமதுமருத்துவ செலவீனங்களை முறைபடுத்தி,கொண்டோமேயானால்.. அது சிறப்பாக இருக்கும்.
அதை கருத்தில் கொண்டு தான் இந்த தொடர் தொடர்கிறது.
நோய் ஏற்பட்டதும் பயந்து மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும் என்று இல்லாமல் நமது , வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து அவர் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது எழுத படுகிறது.
அவ்வாறு உபயோகித்த பிறகும் மேற்படி சங்கடங்கள் இருந்தால் முறைப்படி அவருக்கு தெரிந்த மருத்துவரை அணுகி
நோயுக்கான காரணத்தை அறிந்து
சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.
சாதாரணமாய் ஏற்படுகின்ற,
அஜீரணத்திற்க்கு.
ஒரு டம்ளர் தண்ணீரில்
சிறு துண்டு இஞ்சி,
ஒரு ஸ்பூன் சீரகம், மற்றும் சோம்பு மூன்றையும் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்னர் வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
கருப்பட்டியுடன் ஓமம், சோம்பு,மற்றும் சீரகம் போட்டு கசாயம் செய்து பருகினாலும் அஜுரணம் சரியாகும்.
வயிற்று வலி உண்டாகி வலியில் துடித்தாள்,
ஒரு ஸ்பூன்
வெந்தயத்தை கொஞ்சம் நெய்யுடன் சேர்த்து வறுத்து பொடி செய்து மோரில்
கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி சரியாகும்.
மூக்கடைப்புக்கு
ஒரு துண்டு சுக்கை 5 டம்ளர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் சரியாகும்.
தலைவலி உண்டானால்,
துளசி இலைகளை கொஞ்சம் எடுத்து , அதனுடன் ஒரு சின்ன துண்டு சுக்கும், 5 இலவங்கம், சேர்த்து அனைத்தையும்
அரைத்து நெற்றியில் பற்று போட்டால் நீண்ட கால தலைவலிகள் குணமாகும்.
பல் கூச்சம் இல்லாமல் இருக்க,
நிழலில் காய வைத்த புதினா இலையை உப்புடன் சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் பல் கூச்சம் குணமாகும்.
வாய்ப் புண் ஏற்பட்டு எதுவுமே சாப்பிட சிரமம் உண்டானால்
கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து நன்றாக் மென்று சாப்பிட்டால் அது குணமாகும். அது போல கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தாலும் வாய்ப்புண் ஆறும்.
தொண்டை கரகரப்புக்கு உண்டாகி தொந்தரவு குடுத்தால் ஒரு துண்டு சுக்கும், சின்ன திப்பிலியும்
5 மிளகு, 5 ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து அவைகளை ஒன்றாக பொடி செய்து ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
ஆரஞ்சு பழ ஜுஸ் குடித்தாளும் இந்த தொந்தரவு சரியாகும்.
தோல் நோய்க்கு
ஆரஞ்சு தோல், அல்லது பப்பாளி தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர தோல் நோய்கள் குணமாகும்.
உடல் சூட்டால் கண் எரிச்சல் உண்டானால்,
வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்து தலையில் நன்றாக தடவி குளித்து வந்தால் கண் எரிச்சல் மற்றும் உடல் சூடும் குறையும்.
உடலில் உண்டாகும் வியர்வை நாற்றம் சரியாக வெள்ளை
படிகாரத்தை அளவுடன் குளிக்கும் நீரில் கலந்து குளித்தால்
துர்நாற்றத்துடன் வெளி வரும் வியர்வை நாற்றம் குறைந்து
நாளடைவில் சரியாகும்.
உடலில் எங்கு காயமோ அல்லது ஆறாத புண் இருந்தால் அவை சரியாக,
சிறு துண்டு மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களுக்கு மேல் களிம்பு போல் போட்டு வந்தால் அது குணமாகிவிடும.
சமையல் அறை மருத்துவம்
இன்னும் தொடரும்…….
இன்ஷா அல்லாஹ்…..