Categories
articles

மனித வரலாறில் நோயுக்கு பெரிய இடம் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியம் எதுவுமே கிடையாது.
நோய்கள் புதுப்புது பெயர்களில் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. .

‘சார்ஸ்’என்ற நோய் உலகெங்கும் பரவி தன் பங்குக்கு உலகத்தை பயமுறுத்தி கொண்டும்

.பல நாடுகளில் ‘மெர்ஸ்’ எனும் கொள்ளை நோயும் தனது பலத்தை காட்டி கொண்டும் தான் இருந்தது.

அது போல் காசநோயும் பெரும் கொள்ளை நோயாக ஒரு காலங்களில் மக்களை அழித்து கொண்டும்
அச் சுறுத்தி கொண்டும் இருந்தது

இப்படி பிலேக், நிபா, பன்றிக் காய்ச்சல்,சின்னம்மை,தட்டம்மை, கொரானா என புது புது பெயரில பல நோய்கள் அவ்வப்போது உலகில் வந்து கொண்டுதான் இருக்கிறது.

அதற்கு மருத்துவ உலகமும் புதுப்புது பெயர்களைச் சூட்டியும் புது புது மருந்துகளை கண்டு பிடித்தும்
வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்களை கடைபிடிக்க செய்தும் கொடிய நோய்களை பரவாமல் பார்த்து கொண்டு தான் இருக்கிறது.

இப்படி நோய்கள் பரவும் பொழுதெல்லாம். மனிதன் வாழ வழி காட்டிய மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறது. இதற்க்கு இஸ்லாம் காட்டிய வழி முறைகள் என்ன என்று எல்லோர் மனதிலும் கேள்விகள் உதிக்க தான் செய்கிறது.

நோய் காலத்தில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நட வடிக்கைகளை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? என்பதை இன்ஷாஅல்லாஹ் சுருக்கமாக பார்ப்போம்

சுத்தம், ஒழுக்க விழுமங்கள், நல்ல உணவு முறைகள், ஆரோக்கியகரமான முன்னேற்பாடுகள், மன நிம்மதி தரும் இறை வழிபாடுகள் ஆகிய அனைத்தும் ஆரோக்கியத்துடன் தொடர்பு உள்ளதாகவே இருந்து வருகின்றது.

தொற்று நோய்களை தடுக்க இன்றைய மருத்துவ உலகம் தூய்மையை தான் முதன்மையாக பரிந்துரை செய்கிறது.என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

அதுவும் உறுப்புகளைச் சுத்தம் செய்வதை வலியுறுத்தும் விளம்பரங்கள் நமக்கு சாட்சியாகவே தெரிகின்றன.

மனிதருக்கு வாழ வழி காட்டும் இஸ்லாம் தண்ணீரால் உறுப்புகளைச் சுத்தம் செய்வதையே ‘உளு’ என்ற பெயரில் அழைக்கிறது.

ஓலு அல்லது உளு என்று சொல்லப்படும் தூய்மை இஸ்லாமின் கட்டாய கடைமையான தொழுகைக்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது.

‘உளு’ செய்யும் போது கட்டாயம் பல் துலக்குவதும்., கைகளை நன்றாக கழுவுவதும்,

வாய் கொப்பளித்து .பின்பு
மூக்கிற்கு தண்ணீர் செலுத்தி சுத்த படுத்த வேண்டும். என்றும்

முகம், மற்றும் தாடியைக் கோதிக் கழுவி .எல்லா விரல்களையும் முறையாக அழுத்தித் தேய்த்துக் கழுவுதல் வேண்டும்.என்றும் தொழுகைக்கு உடல். உடை இடம்
சுத்தம் அவசியம் என்று சொல்கிறது.

இவ்வாறு இருந்தால்
நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க தற்காப்பு நடவடிக்கைகள் இந்தச் செய் முறையிலியே வலியுறுத்த
படுகின்றது . என்பதை தெரிந்து ஆச்சரியம் அடைய வைக்கிறது.

உலுவின் பொழுது பல் துலக்குவது வாயைச் சுத்தப்படுத்தவது மட்டுமல்ல; இறைப் பொருத்தத்தையும் அது தேடித்தரும் என்று நபியவர்கள் கூறி அதையும் இறை வழிபாட்டின் வரிசையில் இணைத்தார்கள். (புகாரி )

ஒரு இறை நம்பிக்கையாளன் உடல் சுத்தம் உடையவனாக தான் இருக்க வேண்டுமென இஸ்லாம் எப்பொழுதும் வலியுறுத்துகிறது.

ஏனெனில் சுத்தம் இறை நம்பிக்கையில் தொடர்பு உள்ளது.
ஒவ்வொருவரும் இதை மறக்கவும் கூடாது மறுக்கவும் முடியாது.

ஓர் ஊரில் தொற்று நோய் தோன்றி விட்டால் அது வேறோரு இடத்திற்குப் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்பது தான் சிறந்த வழி முறை.

இதனை மனித வர்க்கத்திற்கு வழி காட்டியாக வந்த இறைவனின் இறுதி தூதர் தமது வாழ்க்கையின் மூலமாக
நமக்கு காட்டி சென்றுள்ளார்கள்.

தொற்று நோய் இருப்பவர் மற்றவர்களுடன் தங்குவதைத் தடை செய்யவேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“நோயுற்ற மனிதரை ஆரோக்கியமானவருக்குப் பக்கத்தில் கொண்டு வரவேண்டாம்”. (புகாரி, முஸ்லிம்).என்றும் கூறியுள்ளார்கள்

எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும்

நபி (ஸல்) அவர்கள்
தாம் தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள்.

தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374)

நபி (ஸல்) அவர்கள் தும்மலின் நீர் யார் மேலும் பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

காலரா, அம்மை போன்ற கொடிய நோய் ஓர் ஊரில் பரவலாக இருந்தால்
நீங்கள் வராதீர்கள். நீங்ள் அந்த ஊரில் இருந்தால் அவ்வூரை விட்டும் வெளியேறாதீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

நோயுற்ற கால்நடைகளை ஆரோக்கியமாக உள்ள கால்நடை களுக்கு அருகே சென்று தண்ணீர் குடிக்க வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்” (புகாரி)

எல்லாம் இங்கு காரணங்களின் அடிப்படையில் தான் இயங்குகிறது. எனவே நோய்க்கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சென்றுவிட்டால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவருக்கும் அதே நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த ஊருக்கு செல்லாமல் அந்த நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும்.என்றும் நபி (ஸல்) சொல்லியுள்ளார்கள்.

ஜாஹிலிய்யா காலத்தில் யாருக்கும் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் இருந்தது கிடையாது.

அப்பொழுது ஏகத்துவத்துக்கு முரணாக பல இணை வைப்பு கொள்கைகளை நம்பியிருந்தது போல் தொற்று வியாதிகளையும் நம்பி தான் யிருந்தனர்.

நோய் நம்மைத் தொற்றி விடாமல் இருப்பதற்காக சுற்றுச்சூழலின் தீங்கிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் பல அறிவுரைகள் சொல்லுகிறது இஸ்லாம்.

வியாதி பாதித்த ஊரில் இருப்பவர் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அந்த ஊரை விட்டும் வெளியே செல்லவேண்டாம், என்று நபி (ஸல்) அறிவுறுத்தியிருப்பது தூர நோக்கு சிந்தனை மிக்கது என்பது மட்டுமல்ல; 19-ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளது சிந்திக்க கூடியதுமாகும்.

அதாவது, நோயால் பாதிக்கப்பட்ட ஊரில் ஒருவர் வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றினாலும் அவருடைய உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்திருக்கலாம்.

மருத்துவ ஆய்வின் படி அவரிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. அல்லது அவருக்கு சில நாட்களுக்குப் பின் நோயின் அறிகுறி தென்படலாம்.

சில நோய்க்கிருமிகள் இரண்டு நாட்களிலேயே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சில நோய்க்கிருமிகள் சில மாதங்களுக்குப் பிறகே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கையில் ஒருவர், நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம், என்று நினைத்து வெளியூருக்குச் சென்றால் நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் கிருமி பரவ காரணமாகிவிடும்

சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக நபியவர்களும் நபித்தோழர்களும் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். தோட்டங்களில் தொழுவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரியப்பட்டிருக்கிறார்கள். (திர்மிதீ)

சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று.

உணவருந்தும் முன்பும் பின்பும் கை கழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் –)

நக இடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல் நலத்ததைக் கெடுக்கக் கூடும். எனவே, நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள்

உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள்.

தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள்

. இரவு நேரங்களில் கரங்கள் (அசுத்தமான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்,

கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே வேலையில் இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவிகிறது என்பதையும் மறப்பதற்குமில்லை.

கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக மனிதர்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும், என்றும் (யாரும் யாருக்கும்) தீங்கிழைப்பதோ பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சிரமம் கொடுப்பதோ கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

ஒரு முறை.அல்லாஹ்வின் தூதரே! ஆரோக்கியத்துடன் துள்ளித்திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?” என்று நபி இடம் ஒருவர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று அவரிடம் திருப்பிக் கேட்டார்கள்.

இதை அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி.

ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு எல்லோரும் கவனிக்கத்தக்கதாகும்.

முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதையும் உணர்த்துகின்றார்கள்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும்.

ஒருவர் இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும

. இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று மறுப்பது இல்லை.

எனவே நோயின் தாக்கத்தை உணர்ந்து அதை போக்கும் வழி முறையும் கடைப்பிடித்து வாழ்ந்தோமேயானால். எல்லாம் சரியாகும். நம் வாழ்வும் பயணாகும்.

======.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Calendar

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Recent Comments