இறைவனின் வார்த்தைகள் என்று சொல்ல கூடிய
திரு குர்ஆனில் பல அற்புதங்களை நாம் படித்து தெரிந்து கொள்ள முடியும்.
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான் அல்லாஹ் படைத்துள்ளான.
( அல்குர்ஆன் 31:20 ) என்றும்,
அவற்றைக் கொண்டு உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளான். எனவே நீங்கள் அவற்றை தாராளமாகப் பயன்படுத்தி அவற்றிலிருந்து இறைவனின் அருட்கொடைகளை தேடிக் கொள்ளுங்கள்.
( அல் குர்ஆன் 2:29 )
என்றும், அவர்களில் நாம் படித்து புரிந்து கொள்ள முடியும்.
அல்லாஹ்வின் படைப்புகளைப் பயன்படுத்தி போதிய வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வது நம் அனைவரின் மீதுள்ள கடமையாகும்.
அந்த வாழ்வாதாரங்கள் தானியங்களாகவும் பழங்களாகவும் நம்முன்னே வெளிப்படையாகவே இருக்கின்றன.
அவற்றில சில, பூமியில் மறைந்து கிடக்கின்றன. விவசாயம் செய்து அவற்றைப் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
உலோகங்கள் மற்றும் எண்ணற்ற அமிலங்களும் தாதுப் பொருட்களும் கனிம வளங்களாக பூமியில் புதைந்து கிடக்கின்றன.
(அல் குர்ஆன் 13:14, 53:39)
இப்படி பல வசங்களை நாம் இறைவனின் வார்த்தையான திருக்குர்ஆனில் படிக்க முடிகிறது.
ஆனால் அவைகளை பற்றிய சிந்தனையை அதில் நாம் செலுத் தி கின்றோமா?.
என்று யோசிக்க தான் வேண்டும்.
இவ்வாறு பூமியில் கிடைக்க கூடிய பல அற்புதங்களில் பழங்களும் ஒன்று. அந்த பழங்களை கொண்டாடியவர்கள் நம் முன்னோர்கள்.
‘முத்தமிழே…முக்கனியே…’ என கொஞ்சிப் பேசி பழங்களை போற்றி மகிழ்ந்தவர்கள் நாம்.
அப்படி பட்ட பழங்களை உண்பதையே , இன்றைய சந்ததியினர் பலர் மறந்துவிட்டனர்.
உணவாகவும் மருந்தாகவும் பயன் அளித்து நிறைவான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு சேர்த்தே அள்ளித்தருபவை பழங்கள் .என்பதை
தெரியாமலே இன்றய தலைமுறை யினர் வாழுகின்றனர்.
பழங்கள் சுவைக்காகவும்
ருசிக்காகவும் உண்பது என்று இல்லாமல் பழம் நமக்கு பலம் என்பதை புரிந்து கொண்டோ மேயானால் சிறந்ததாக அது தெரிந்து நமக்கு அதன் அருமைகளும் புரிய வரும்.
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் நமக்கு இறைவன் கொடுத்து உள்ளான் என்பது அனைவரும் கவணிக்க தக்கது.
இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகள் இதனால் நம் உடலுக்குள் எட்டிப் பார்க்காது.
கால நிலை பருவத்துக்கு ஏற்ப இறைவன் நமக்கு பல வித பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், அவைகளை தொடர்ந்து கிடைக்கும் பழ வகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.
நம் ஊரில் கிடைக்கக்கூடிய சில பழங்களை பற்றியும் அதனின் அருமை பெருமைகளை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் வெளி நாட்டு மோகத்தினால் சில பழங்களின் பின்னால் சிலர் விலைகள் அதிகம் கொடுதது போகின்றனர்.
நம் ஊரில் கிடைக்கும் பழங்க ளையும் அவற்றின் பலன்கலையும் அவைகளை எடுத்துக்கொள்ளும் முறைகள், பற்றி நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
ஒருவரின் வயது, பாலினம் மற்றும் அவரின் உடல் உழைப்பைப் பொருத்து அவருக்கு தேவை படும் உணவுவின் அளவுகள் வேறுபடும்.
. இருப்பினும் அவரவர் உடலுக்குத் தேவையான கலோரியைப் பொறுத்து தேவை படும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
முக்கனிகளில் முதன்மையானது. மாம்பழம்.
இது பழங்களின் அரசன்.என்றும் அழைக்கப்படுகிறது.
மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலி பீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவைகள் அதிகம் உள்ளன.
இதுதவிர, வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியவை சத்துக்களும் நிறையவே உள்ளன
வைட்டமின் ஏ, கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்
வைட்டமின் சி – நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மாம்பழத்தில் மார்பகம், மற்றும் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது
மாம்பழத்தில் உள்ள சில வகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கிறது.
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் சிறப்பு பெறுகிறது. பலாப்பழத்திலும் வைட்டமின் – ஏ சக்தி நிறைந்திருக்கிறது.
இது குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து . ரத்த விருத்திக்கும் உதவுகிறது. நம் உடலுக்கு ஊக்கமளித்து நரம்புகளுக்கு புத்துணர்வையும் ஊட்டும்.
வாழைப்பழம் முக்கனியில் மூன்றாவது ஆகும்.
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன,
குறிப்பாக உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டை வழங்கும்.
மேலும் வாழைப்பழத்தில் விட்டமின்கள், பொட்டாசியம், ஃபோலேட், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளது.
தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவதினால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகி ஜீரண சக்தி அதிகரிக்கும்.
இது மட்டும் இல்லாமல் பல வகை பழங்கள் அதிகமான பயன்களை நமக்கு அள்ளி தந்து கொண்டு தான் இருக்கிறது.
அவைகளில் சிலதை பார்போம்.
ஆப்பிள்:-
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் நாம் மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது.
ஏனெனில் ஆப்பிளில் விட்டமின்கள், புரோட்டீன்கள் போன்ற உயிர் சத்துக்கள் நிறைய உள்ளது.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைக்கப்படும். குறிப்பாக ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வைட்டமின்கள் நிறைய உள்ளது.
எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள். தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட அப்படியே கடித்து ருசித்து சாப்பிடுவது சிறந்தது.
ஆப்பிளில் உள்ள ஒரு வகை ஊட்டச்சத்து நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்று நோயை தடுக்கின்றதாம்
பப்பாளி :-
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, இ, பொட்டாசியம், கல்சியம், ஃபோலேட் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இத்தகைய பப்பாளி பழத்தை சாப்பிடுவதினால் பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் நரம்புகள் பலமடையவும், ஆண்மை தன்மை பலமடையவும், ரத்த விருத்தி உண்டாக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.
மாதுளை:-
கல்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, சோடியம், விட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
நீண்ட நாள்மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மாதுளம் பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
அதேபோல் வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
பித்த சம்மந்தமான உடல்நல பிரச்சனைகளுக்கும் மாதுளம் நலலது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘சி’ உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன.
மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
சாத்துக்குடி.
சாத்துக்குடியில் வைட்டமின் ‘சி’ உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் ‘சி’ குறைவினால் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.
திராட்சை.
திராட்சையில் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. அதோடு நார்ச்சத்தும் உள்ளது.
இப் பழச்சாற்றை சாப்பிட அதிக தாகம் தணியும், நாக்கு வறட்சி நீங்கும்.
சப்போட்டா.
சப்போட்டாவில் மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட் கலும் சிறிதளவு உள்ளது.
இதில் சர்க்கரை மிக எளிய அளவில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும். இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போ க்கும்.
தர்பூசணி.
தர்பூசணியில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.
வயிறு, மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், கணையப் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லைகோபீன் (Lycopene) என்ற வேதிப்பொருள் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது.
இதில் உள்ள சிட்ருலைன் (Citrulline) என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. நீர்ச்சுருக்கைப் போக்கி சிறுநீர் நன்றாக போக செய்யும் .கோடையில். உண்டாகும். தாகத்தை தணிக்கும்.
சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் நார்சதும் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து ஆகிய தாதுப்பொருள்களும் வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ -யும் உள்ளன.
நார்ச்சத்து குறைவினால் மலச்சிக்கல் ஏற்படும், பொட்டாசியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும். மேற்கண்ட நோய்களைத் தீர்க்க இப்பழம் உதவுகிறது .
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. நார்ச்சத்து ,கால்சியம் மாவுப்பொருள் போன்ற பல உள்ளது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல. குணமாகும்.
ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.
பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்
பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் கிடைக்கும்.
பேரீச்சம்பழம்
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.
தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
எலுமிச்சம்பழம்
ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும்.
கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்.
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
பழங்கள் உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுதுமாக குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் பழங்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.
நமது முன்னோர்களும், சித்தர்களும் பழங்களை களையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர துடன்ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும்.
பழங்கள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு.
உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த பழங்களை சாப்பிட்டால் ,குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்விகள் கேட்கக் கூடாது.
பொதுவாக நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது.
பழங்களில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது.
எனவே நாம் இறைவனின் கொடைகளை நினைத்து அவைகளை மதித்து நன்றாக சுவைத்து அதனுடைய பலனை பெருவோம்.வாழ்வில் ஆரோக்கியம் பெற்று மகிழ்வோம்.
இன்ஷா அலலாஹ்….