நாம் வாழும் இன்றைய போட்டி நிறைந்த வாழ்க்கையில் மன அழுத்தம் (Depression) என்ற சொல்லை சொல்லாதவர்களே இருக்க முடியாது என்ற அளவில் மன அழுத்தம் பற்றிய பேச்சி தொடர்ந்து இருந்து வருகிறது.
உள்ளம் அமைதியின்மை என்று சொல்லபடும் இந்த மன அழுத்தம் ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல், பலருக்கும் இருந்தது வருகிறது.
இந்த பாதிப்பால் பாதிக்க பட்டோர் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வாழ்வது இன்று மிக சகஜமாகி விட்டது.
நாகரிகத்தில் உயர்ந்தவர்கள் என்று பொய் முலாம் பூச்சி கொண்டு வாழும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இன்றெல்லாம் மன அமைதிக்காக பல வழிமுறை களை தேடி, பல போதை பொருள்களை நாடி, இயற்கைக்கு முரணான குடும்ப உறவுகளால், கண்ணியமான உறவு முறைகளை சீர்கெட்டு மன நோய்க்கு ஆளாகியது மட்டும் இல்லாமல் பல உடல் நோய் களாலும் பாதிக்க பட்டு அவதி படுகின்றனர் என ஆய்வுகள் உலகிற்கு கூறுகின்றது.
நம் தேசத்தில் அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு
இருந்தாலும் தற் கொலை செய்து கொள்பவர்களில் நாட்டிலேயே முதலாவது இடத்திலும் அது இருப்பது மிகவும் யோசிக்கவும் வைக்கின்றது.
பாமரர்கள் மட்டும் என இல்லாமல் படித்தவர்களையும் விட்டு வைக்காத இந்த மனஅழுத்தம்
என்கின்ற நோய் ஏற்பட யார் காரணம்? அல்லது எது காரணம் என்று கொஞ்சம் யோசித்து பார்த்திட வேண்டும்.
மன அழுத்தம் என்ற மன நோய் வயது வித்தியாசமின்றி, மத வேறுபாடின்றி, கலர் பாகுபாடின்றி, நில வேறுபாடின்றி வருவது ஏன்
என்று யோசிக்காமல் நம்மால் வாழ முடியாது.
இன்று இந்த மன அழுத்தம் என்ற மன நோயால், தாங்கள் தான் பகுத்தறிவு உள்ளவர்கள் என்று சொல்லும் கடவுள் மறுப்பாளர்களும், அல்லது எல்லாமே அவன் செயல் என்று நம்புகின்ற நம்பிக்கையாளர்கள் வரை அனைவரும் பாதிக்க பட்டு அவதி படுவதை நாமும் பாரக்க தான் முடிகிறது.
ஏன் ஒரு சில முஸ்லிம்களும் கூட இதனால் பாதிக்க பட்டு தற்கொலை செய்து கொள்வதையும் நாமும் பார்க்க தான் செய்கின்றோம்
மன அமைதிக்கு இறை நம்பிக்கைக்கையே முக்கியம் என்ற நம்பிக்கையில் வாழும் முஸ்லீம் களிடமும் இந்த நிலையா என்ற கேள்வியும் எழுதான் செய்கிறது.
நம்பிக்கைகளில் உறுதி இல்லாத நிலையால்தான் மன அழுத்தம் ஏற்படுகின்றது என்பதே பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.
இந்த நம்பிக்கை வயது வந்த பெரியவர்களுக்கு இல்லை என்றால் அதனைப் பல விதங்களில் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை ஆலோசனைகள் மூலமாகவோ, அல்லது உரிய மருந்துகள் மூலமாகவோ சரி செய்து விட முடியும்.
ஆனால் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகள். பாதிக்க பட்டால் அது எளிதில் அடையாளம் காண முடியாமல் அந்த குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதித்து விடுகின்ற நிலை ஏற்பட்டு விடும்.
குழந்தைகளை பாதிக்கும் மன நோய்களை கண்டறிவது மிக மிக அவசியம்.
அவர்களின் அன்றாட நிகழ்வு களை கவனித்து வந்தோமேயானால் தான் அதனை கண்டு பிடிக்க முடியும்.
அதிக பயம், திடீரென மூச்சி வாங்குவதல்,
பள்ளிக்கு செல்ல பயப்படுதல்,
திடீரென்று கவனம் குறைந்து படிப்பை வெறுத்து ஒதுக்குதல், தேவையில்லாமல் கோபம் கொள்ளுதல், அடிக்கடி எரிச்சல் அடைதல்
படுக்கையில் சிறுநீர் கழித்தல்
அளவுக்கு மீறிய சுறு சுறுப்போடு இருத்தல்,
யாருக்கும் கீழ் படியாமையுடன் எதிர்த்து செயல் படுதல்,
பொய் சொல்லுதல் தேவையில்லாததை கூட
திருடி மறைத்து வைத்து கொள்லுதல்,
கையில் கிடைக்கும் மண், பேப்பர், பென்சில் போன்றவைகளை விரும்பி சாப்பிடுதல்,
பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு பிரண்டு அழுகுதல், கண்ணீர் வராமலே கதறி சத்தம் போட்டு கொண்டு இருத்தல்,
கையில் கிடைத்த பொருட்களை உடைத்து வீணாக்குதல்,
போன்ற பல பழக்கங்களும் இருக்கலாம்.
அல்லது திடிரென இவைகள் தோன்றலாம்.
இவ்வாறு ஒரு குழந்தைகளுக்கு ஏற்பட்டால்
அதை சாதாரணமாக நினைத்து பெற்றோர்களோ,
அவர்களின்பொறுப்பாளர்
களோ விட்டு விடக் கூடாது.
அது குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் மன நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
வளர்ந்தவர்களாயினும், குழந்தைகளாயினும் பல்வேறு காரணிகளால் தான் “மன அழுத்தம்” எனும் உளவியல் கோளாறுகள் ஏற்பட காரணமாகிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கோளாறுகள் முற்றும் வரை யாராலும் புரிந்து கொள்ள முடியாமலும், கண்டு கொள்ளாமலும் போய் விடுகின்றது.
இந்த மன அழுத்தம் பெரியவர்களுக்கு உண்டாகிவிட்டால், அவர்களுக்கு
அதிக சோர்வு, திடீரென அச்சம், பயம், உள்ளத்தில் படபடப்பு, இதயத் துடிப்பு அதிகரித்தல், எதிலும் ஆர்வமின்மை, சுத்தம் இல்லாமால் இருத்தல், அதிக தூக்கம், அல்லது தூக்கமின்மை, பசியின்மை, அதிகரித்த கோபம், தனிமையை விரும்புதல், வாழ்க்கையில் விரக்தியடைதல்,
உறவுகளை முறித்து வாழுதல், எதற்க்கெடுத்தாலும் கடுகடுத்தல், எல்லோரிடமும் எறிந்து விழுதல், தனிமையில் அழுதல் இவ்வாறு பல்வேறு அறிகுறிகள் மனஅழுத்தத்தின் வெளிப்பாடாக தெரிய வரும்.
இந்த மன அழுத்தம் அல்லது மன உளச்சல் ஏற்படுவதற்கு மூளையில் இரசாயன சம நிலையின்மை உண்டாகுவதாலும், உடலில் தேவையான ஹார்மோன்கள் போதிய அளவில் சுரக்காமையும் தான் காரணம் என்றும் உளவிலாளர்கள் கூறுகின்றனர்.
இது மட்டுமின்றி நோயெதிர்ப்புச் சக்தி குறைதல், தலைவலி, சுவாசக் கோளாறுகள், வாய்வு சார்ந்த கோளாறுகள், கண் பார்வை குறைதல், உடல் மெலிவு, சுறுசுறுப்பு இன்மை, போன்ற பல்வேறு உடல் தொடர்பான நோய்களும் இந்த மன அழுத்த நோயால் ஏற்படுகின்றன.
என்றும் அவர்கள் எச்சரிக்கை
செய்கின்றனர்.
உலகில் உள்ள அனைத்திற்கும் தீர்வு சொல்லும் இஸ்லாம் இதற்க்கு தீர்வு சொல்லாமலா விட்டு இருக்கும்.
எல்லாம் வல்ல ஏக இறைவன், மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சட்ட திட்டங்களையும் அழகாக தந்துள்ளான். அப்படி இருக்கும்போது இந்த மன அழுத்தத்திற்கு நிவாரணம் சொல்லாமல் இருப்பானா?
நாம் தான் அதன் உண்மைகளை கண்டு கொள்ளாமல், நமக்கு நாமே சிரமத்தை உண்டாக்கி கொண்டு வேதனை படுகின்றோம்.
குழந்தைகள் பருவ வயதை அடைந்த பிறகு தான் தொழுகை நோன்பு போன்ற கடமைகள் செய்ய வேண்டும் என்ற நிலையில் நாம் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
சிறு வயது முதலே நாம் தொழும் போதும், நோன்பு வைக்கும் போதும், மற்ற இறை வழிபாடுகளில் ஈடு படும் பொழுதும், நம் குழந்தைகளை நாம் அதில் பங்கு பெற செய்து வாழ்ந்திட பழக்க படுத்த வேண்டும்.
இவ்வாறு நாம் வாழும் போது தான் இறைவனின் சட்டத்திட்டங்களை நம் குழந்தைகளும் தெரிந்து கொள்ள முடியும்.
வாழ்வின் பொருள் எளிதாக அவர்களுக்கு புரிந்து அது விருப்பமானதாகவும் ஆகி குழந்தைகளின்வாழ்க்கையில்
அமைதி, நிம்மதி, சந்தோசங்கள் போன்றவைகள் கிடைக்க செய்யும்.
நமது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தொழுகை நோன்பு ஹஜ் போன்ற வணக்கங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் வழக்கம் இருந்துள்ளது என்பது அவர்களின் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடமாகும்.
ஆனால் இன்று நாம் வாழும் வாழ்க்கையில் அது போல் உள்ளதா? யோசிப்போம்.
வாழ்வில் மனநல ரீதியாக ஆரோக்கியமாக நம் குழந்தைகள் வாழ வேண்டும் என்றால் சிறு வயது முதலே இறை நம்பிக்கையை அவர்களுக்கு போதித்து, நல்ல இலக்குகளை நோக்கி அவர்களை அழைத்து செல்ல வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் அதன் மீது கவனம் செலுத்தி தேவையற்றதை ஒதுக்கி வாழ்வில் முறையாக வாழ முடியும்.
அது போல் நமது வாழ்வில் நாமும் வாழ்வில் அமைதி பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்றால்
மனதில் சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் என்றால்….
இறைவனின் இறுதி வேதம் கூறும்படி…
இறைவனை நினைவு கூறும் பொழுது தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன.
என்ற வசனத்தை (13:28)
மீண்டும் மீண்டும் வாசித்து
யோசித்து வாழ வேண்டும்.
நமது குழந்தைகளுக்கும்
அதை புரிய வைத்து வாழ வேண்டும்.
மன அமைதிக்கு எதை எதையோ தேடிக் கொண்டு வாழும் மக்களிடம் இறை வசனத்தை எடுத்துறைத்து நாமும் வாழ்ந்தொமேயானால்..
நல்லதை ஏவி தீமையை தடுக்கும் அழைப்பாளராக நாமும் வாழ்ந்திட முடியும்.
இல்லை என்றால்……
நாமும் மன அழுத்த நோயின்
அத்தாச்சியாளர்களாக வாழ நேரிடும்..யோசிப்போம்…… அப்படி பட்ட அமைதி நிறைந்த வாழ்க்கையினை பெற்று அனைவரும் வாழ உலகில்
அதனை நடை முறை படுத்த
.நாமும் பாடுபடுவோம்.
இன்ஷா அல்லாஹ்.
————————————+.