நாம் வாழ்வில் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அருட் கொடைகள் பல இருக்கின்றது. அதில் ஓன்று தான் நம் தூங்குகின்ற தூக்கம் ஆகும்.
தூக்கம் மனித வாழ்வின் இன்றியமையாதவொன்று. உணவைப்போல தூக்கமும் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
நம்அனைவரின் உடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள தூக்கம் என்பது இன்றியமையாதது.
என்பதில் யாருக்கும் சிறிதளவும் சந்தேகம் இருக்காது.
தனது தூக்கத்தை இழந்த ஒருவருக்குதான் அதனின் அருமை, பெருமைகள் புரியும்.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டும் என்று பல்வேறு விதத்தில் இன்றைய மருத்துவ ஆய்வுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து கொண்டு பல விதமாக தேடிக் கொண்டு இருக்கின்றது.
நோய் எதிர்ப்பு மண்டலம் தான் தொற்றுகளில் இருந்தும், நுண்கிருமிகளின் தாக்குதலில் இருந்தும் நம்மை எல்லாம் பாதுகாக்கின்றது.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது
நாம் உண்ணும் உணவின் மூலம் மட்டுமே கிடைத்து விடுவதில்லை.
அந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக மிக முக்கியமானது நம்முடைய தூக்கமும் தான் என்பதை இன்றைய மருத்துவ வல்லுநர்கள் சொல்லுவதை அனைவரும் கவனித்தே ஆக வேண்டும்.
ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் வலுப்படுத்திடவும்,
தொற்று பாதிப்புகளால்
நோயால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் நல்ல உணவும், போதிய ஓய்வும், முறையான தூக்கமும் தான் தேவை என்று எல்லா வகை மருத்துவர்களும் இன்றய நாட்களில் கூறுவதை யாரும் மறந்து விட முடியாது.
எப்படி வேண்டுமானாலும் தூங்கலாம் எப்பொழுது வேண்டுமானாலும் தூங்கலாம், என்று அதன் அர்த்தமும் கிடையாது.
இரவு தூக்கத்தினால் தான் ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும் என்று அவர்கள கூறுகின்றனர்.
நம் உடலில்
ஹர்மோன்கள் சுரப்பதை முறை படுத்தி
நமது மூளையின் செயல்பாட்டை சரி செய்து.
இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துக்கள் உண்டாகாமல் நம்மை பாதுகாத்து,
உடல் எடையினையும் முறையாக பராமரித்து,
சர்க்கரை நோய் என்னும் கொடிய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களின் பாதிப்பில் இருந்தும், நம்மை
பாதுகாத்து,
பட படப்பு, கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற உளவியல் ஆபத்துக்களில் இருந்தும்
நாம் இரவில் தூங்கும் தூக்கம் தான் நம்மை காப்பாற்றுகின்றது.
இப்படி பட்ட ஆரோக்கியத்தை தரும் தூக்கத்திற்கு உரிய பங்களிப்பை நாம் தருகின்றோமா.? அந்த தூக்கத்தை மதிக்கின்றோமா?
என்று இன்றைய அவசர உலகில் நாம் யோசித்தே ஆக வேண்டும்.
ஒவ்வொருவருடைய
தூக்கத்திற்கும் ஏற்ற
நேரம் ஒவ்வொரு இரவும் தான். என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
நாம் இரவில் தூங்கும்
போது தான்
நன்மைகள் நமக்கு
பல உண்டாகும்.
இரவில் தூங்காமல்
பகலில் தூங்குவதால் அந்த நன்மைகள் எதுவும் கிடைக்க போவது இல்லை.
ஒருவர் இரவில் தூங்கும் போது மட்டுமே ‘மெலடோனின்’ என்ற ஒரு வேதிப்பொருள் நம் உடலில் சுரக்கிறது என்றும்மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.
இன்றைக்கு சொல்லும் இந்த நிகழ்வை 1435 ஆண்டுகளுக்கு
முன்பே தனது இறுதி வேதமான குர்ஆனில் இறைவன் கூறிவிட்டான் என்பது அனைவரும் யோசிக்க வேண்டியது அவசியம்.
அல்லாஹ் பகலை மனிதன் ஓடியாடி இயங்குவதற்காகவும் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்வதற்காகவும் அமைத்து தந்து இரவை தூங்கி ஓய்வெடுத்துக்கொள்ளும் வகையில் அமைத்துள்ளதாக
சொல்லி விட்டான்.
புனித வார்த்தையான குரானில்.
,,,,, தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கி, இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
என்றும்,
…..பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம். என்றும் மனித வாழ்வின் வழி காடியான தமது வாக்கில் கூறுகிறான்.
( அல் குர்ஆன் : 78:9…11 )
விஞ்ஞானம், மருத்துவம் போன்ற தொழில்நுட்ப ஆய்வுகள் இல்லாத நிலையில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் தூக்கம் எனும் ஒன்றை ஏன் கூறிட வேண்டும்
ஒருவர் இரவில் தூங்கும் போது தான் நமது உடலில் ஹா்மோன் என்ற வேதி பொருள் சுரக்கிறது அந்த வேதி பொருளே நமது ஆரோக்கியமான, முழு தூக்கத்திற்கு காரணமும் ஆகின்றது.
இந்த ஹார்மோனுக்கு
மெலடோனின் என்றுபெயர்.
இந்த melatonin என்ற hormone இரவில்தான் நம்மிடம் சுரக்கின்றது.
இந்த ‘மெலடோனின்’ என்ற வேதிப் பொருளோ இரவில் தூங்காமல் கண் விழித்து இருந்தால் சுரக்காது என்றும் எச்சரிக்கை செய்கிறது இன்றைய மருத்துவ உலகம்.
இந்த hormone சுரக்காமல் போய்விட்டால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப்போய், நமக்கு
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து
உடலில் எல்லா நோய்களையும் உண்டாக்கி, நம்மை பலவீனமடைய செய்து விடும் என்றும் அதனின் ஆபத்துகளையும் சொல் கின்றனர் மருத்துவர்கள்.
தூக்கம் தானே அதை இரவில்
தூங்கினால் என்ன, பகலில் தூங்கினால் என்ன என்று யாரும் சாதரணமாய் நினைத்து விட முடியாது.
இரவில் ஒருவர் கண் விழிப்பதால் அவரின் கல்லீரல் பாதிப்பு அடைந்து.
அவரின் கண் முதல் சிறுநீரகம் வரை நாளடைவில் கடுமையாக பாதிப்படைய காரணம் ஆகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கையும்
செய்கின்றனர்.
பகல் தூக்கமானது இரவுத் தூக்கத்திற்கு எந்த வகையிலும் ஈடு இணை ஆகாது என்றும் அதனால் பயன்கள் இல்லை என்றும் ஆராய்ச்சிகள் உறுதியாக சொல்கின்றது.
ஒருவர் பகலில் தூங்குவதால் அவருக்கு செரிமானப் பிரச்சினைகள், நரம்புத் தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம் போன்ற பல நோய்கள் தொடங்கி,
எதிர் மறையான எண்ணங்கள், மற்றும் அந்தரங்க குறைவுகள், கல்லீரல் பிரச்சினைகள் என நோய்க்கு மேல் நோய்கள் பல உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்றும் எச்சரிக்கை செய்கின்றனர்.
இதனை தான் தூக்கம் ஓர் இபாதத் என்று இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழியுறுத்தி சொல்கின்றது.
அதனால்தான் தூங்கச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் இறைவனின் இறுதி நபி (ஸல்) அவர்களும் விளக்கியும் உள்ளார்கள்.
வாழ்கின்ற ஒவவொரு நாளும்
ஒவ்வொரு முஸ்லிமும் படுக்கைக்கு செல்ல முன்பு உளு செய்து கொள்ள வேண்டும் என்றும்
தனது படுக்கையின் விரிப்பை மூன்று முறை தட்டி கொண்டு
சூரத்துல் பகராவின் 285,286 ஆகிய வசனங்களை ஓதியும்,
குல் சூராக்கள் மூன்றையும் ஓதி தனது இரண்டு கைகளிலும் உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும் என்றும்,
ஆயத்துல் குர்ஸியையும்,
பின் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவைகளும் அல்ஹம்துலில்லாஹ் 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் 34 தடவைகளும் ஓதி தனது தேவைகளை கேட்டு துஆக்களை ஓதிட வேண்டும்.
இவைகளை கடைபிடித்து நாம் வாழ்ந்தோமென்றால்…. நல்ல தூக்கம் மட்டும் இல்லாமல் ஆரோக்கியம் தாருகின்ற தூக்கமாகவும் அது இருக்கும்.
என்றும் சொல்லியுள்ளார்கள்.
இந்த ஒழங்குகளைப் பேணி தூங்கச் செல்கின்றபோது நமது தூக்கம் ஓர் இபாதத்தாக மாறும் என்பது மட்டுமல்ல நல்ல, சுகமான, நிம்மதியான, ஆழமான தூக்கமாகவும், உடலுக்கு ஆரக்கியத்தைத் தருகின்ற அற்புத தூக்கமாகவும் அது ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.
c.d.c எனப்படும் centers for disease control and prevention –ன் கோட்பாட்டின் படி வயது வந்தவர்கள் குறைந்த பட்சம் தினம் 7 முதல் 9 மணி நேரங்கள் இரவில் கட்டாயம் தூங்கிட வேண்டும். என்றும் ,
உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க தூக்கம்
இன்றியமையாதது என்றும் ,
போதுமான அளவு ஒருவர் முறையாக தூங்கினால்,
அவரின் உடலில் சைடோகின்ஸ் மற்றும் t-செல்ஸ் உற்பத்தியாகும் என்றும் சைடோகின்ஸ் என்பது எதிர்ப்பு புரதம் என்றும். t-செல்ஸ் என்பது நம் உடலின் போர் வீரர்கள் என்றும்
இவை உடலில் உள்ள ஆண்டி ஜென்களோடு போரிட்டு, நம் உடலை பாதுகாத்து கொள்கிறது என்றும் அறிவித்து உள்ளனர்.
ஒரு சராசரி மனிதன் இரவில் தூங்காமல் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு பல நோய்கள் ஆரம்பமாகி விடும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கையும் செய்கின்றது.
ஒருவருக்கு இரவில் முறையான தூக்கம் இல்லாமல் போய்விட்டால்,
அறிவாற்றல் குறைபாடுகள் (cognitive impairments)
எரிச்சல் (irritability)
மாயத்தோற்ற பயம் (delusions)
பயம், களக்கம், நம்பிக்கையின்னை (paranoia)
மனநோய் (psychosis)
அறிவாற்றல் குறைபாடுகள் (cognitive impairments) போன்ற நோய்கள்
ஆரம்பமாகிவிடுமாம்,
அது மட்டுமின்றி அதிகமான கோபம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு சிறு சிறு விஷயங்களுக்குக் கூட பெரிதாக கருதி மன உலைச்சல், எரிச்சல், ஆத்திரம் ஏற்பட்டு , மாயத் தோற்றம் மற்றும் மாய பிம்பம் போன்ற மன நோய்களும் ஏற்பட்டு விடும் என்றும் சொல்கிறது.
1435 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானம், மருத்துவம் போன்ற தொழில் நுட்ப ஆய்வுகள் இல்லாத நிலையில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் தூக்கம் எனும் ஒன்றை ஏன் கூறிட வேண்டும்?
தூக்கமின்மையின் காரணமாக உருவாகும் மிக முக்கியமான
நோய்களிலேயே மிக கொடிய நோயாக கருதப்படுவது மன நோயாகும் .
ஒருவருக்கு ஏற்படும் பயம், கலக்கம் மற்றும் நம்பிக்கையின்மை உண்டாகும் நோயுக்கு ஆங்கிலத்தில் paranoia என்று கூறுவர்.
அது என்ன வென்றால்
தன்னை யாரோ பின்தொடர்வது போன்ற பிரம்மை, நம்பிக்கையின்மை,
வாழ்க்கையில் விரக்தி போன்ற மாற்றங்கள் மனதில் ஏற்பட்டு வாழ்க்கையே அது வீணாக்கி விடுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதனால் நாம் ஒவவொருவரும்
தூக்கத்தை அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருதி அதனுடைய முறையான வழி முறைகளை கடைபிடித்து வாழ்ந்திட வேண்டும்
இரவை நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதர்க்காகவும் பகலை அவனுடைய அருட்கொடையை தேதிட வேண்டும் என்பதர்க்காகவும் என்று தனது இறுதி வேதமான குர்ஆனில் (28:73) இறைவன் நமக்கு கூறியுள்ளதை மறந்து விட முடியாது.
சமீபத்தில் ஜும்மா உரையில்
மௌலவி ஓருவர்.
பகலில் நாய்கள் தூங்கும், இரவில் ஆடுகள் தூங்கும்.
ஆடுகள் பரக்கத்தோடு இருக்கிறதா? நாய்கள் பரக்கத்தோடு இருக்கிறதா? யோசித்து பாருங்கள் என்று கூறியதை
இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அதனால்
ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய தூக்கத்தின் ஒழுங்கு முறைகளை
முறையான தூக்கத்தை நம் இபாதத்தாக கடைப்பிடித்து…
நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வை இனிமேலாவது வாழ்வோம்….
நமக்கு கிடைத்த
இறை அருட்கொடை களை
உலகிற்கு எடுத்து சொல்லி
அவனை பின்பற்றி வாழும் மக்களாக…. தூய்மையான வழி முறைகளை கடைபிடித்து வாழ எல்லோரையும் அழைத்திடும் அழைப்பாளர்களாக. வாழ்ந்திடுவோம்…….
Dr.எம். நூருல் அமீன்.phd.,