அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடுக்)க விரும்புகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தை (க் கொடுக்க) விரும்பவில்லை.
(திருகுர்ஆன்.2:185).
யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி )
நூல்: புகாரீ (1901), முஸ்லிம். (1393)
இப்படி பட்ட பாக்கியம் நிறைந்த மாதத்தை அடைகின்ற நாம் நோன்பு காலத்தில் நமது. உணவு முறைகளையும் ஆரோக்கியமான. முறையில் கடைபிடித்தால், உள்ளத்தில் மட்டும் இல்லாமல் உடலிலும்
உண்மையான பாக்கியத்தை
பெற்று வாழ்ந்திட முடியும்.
நோன்பு கால சஹர் உணவு என்பது விடியற்காலையில் உட்கொள்ளும் உணவின் நேரமாகும்.
இந்த நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நோன்பு நோட்ப்பவர்கள் உட்கொண்டால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து,
அன்றைய நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.
சஹர் உணவு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் 12 மணிநேரம் உணவு மற்றும் நீர் இல்லாமல் நாம் இருக்க வேண்டியதாகும்.
எனவே நாம் சஹர் நேரத்தில் நல்ல ஊட்டச்சத்துள்ள மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.
ஏன் என்றால்
நார்ச்சத்துள்ள உணவுகள் மலச்சிக்கல் வராமல் தடுக்கவும், அதிகமாக பசி இருக்காமலும் நம்மை பார்த்து கொள்ளும்.
ஆகவே நார்ச்சத்து நிரம்பிய பழங்களான, பேரீச்சம் பழம் ஆப்பிள், வாழைப்பழம், முழு தானியங்கல். கொண்டைக்கடலை, பார்லி, ஓட்ஸ் போன்றவைகளையும்,
பால், முட்டை, சிக்கன், மட்டன், தயிர் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றையும் உண்ணலாம்.
இந்த வகை உணவுகள் ஒரு முழு உணவாகவும் நாள் முழுவதும் நாம் ஆற்றலுடன் இருக்கவும் உதவும்.
நோன்பு முடிக்கும் இஃப்தார் வேளையில் உடனடியாக அதிகமாக உணவையும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதையும் தவிர்த்து கொள்வது நல்லது.
இந்த நேரத்தின் போது அதிகமாக தண்ணீரை கட்டாயமாக குடிக்க வேண்டும். ஐஸ் மற்றும் செயற்கை இரசாயனங்கள் இல்லாத பழ சாறுகள். நீர் ஆகாரம் என்று சொல்ல கூடிய நிலையில் உள்ள கஞ்சி, கடற்பாசி என்று சொல்ல படும் சைனா கிராஸ், இளநீர், நன்னாரி,பாதாம் கோந்து, சர்பத் விதைகள் போன்றவைகள் உள்ள பானங்கள் பருகுவது சிறந்தது.
நோன்பு முடித்து சுமார் ஒரு மணி நேரம் கழித்த பிறகு
மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டு உணவுகள் காய்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
தேநீர் அளவுடன் எடுத்துக்கொள்ளலாம்.
காஃபி யை தவிர்த்து கொள்வது நல்லது.
Cofee அதிகம் பருகினால் உடலில் நீர் சக்தி குறையக்கூடும்.
நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களான வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம், தக்காளி, ஆரஞ்சு, தர்பூசணி, முலாம் பழம், வெங்காயம் போன்றவற்றையும் அதிகம் நோன்பு காலங்களில் சேர்த்து கொள்ள வேண்டும்.
உண்ணும் உணவு முறைகள் இந்த முறையில் இருந்தாள் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு கிடைத்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.
அதனால் வரும் காலங்களில் நோய்கள் ஏற்படாமல் இருக்க முடியும்.
நோன்பு காலத்தில் சிலருக்கு சற்று மந்தமாகவோ அல்லது மலச்சிக்கலோ ஏற்படக்கூடும்.
அதனால் நீர் சக்தி உள்ள உணவுகள் மிக மிக அவசியம்.
சிலருக்கு தலைவலி அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளையும் உருவாக்கும்.
இப்படி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உண்ணாதிருப்பது தான் என்பதை மறக்க கூடாது.
இப்படி பட்ட பாதிப்பு கள் இல்லாமால் வாழ்வதற்கு முறையான உணவுகளை நாம் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
தினமும் நோன்பு முடிந்தவுடன் பழங்கள் அல்லது காய்கறிகள் நிறைந்த ஜூஸ்-ஐ அருந்த வேண்டும். அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சர்க்கரை கலக்காத தயிரை உண்பது நல்லது. அது உடலில் உள்ள தண்ணீரின் அளவை சம நிலையாக வைத்துக்கொள்ள உதவும்.
அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடுக்)க விரும்புகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தை (க் கொடுக்க) விரும்பவில்லை.
(2:185).
நோன்பு நோற்கும் நாம் வெறும் பசியை அனுபவித்தவர் களாக மட்டும் இல்லாமல் ,
அலைந்து திரியும் நம் மனதை ஒரு நிலைப்படுத்த கூடிய அளவில்
சிந்தனைகளை கட்டு படுத்தி
ஓய்வான மனநிலையில் இறைவனின் பொருத்தத்தை நினைத்து , வாழ்ந்தோமேயானால் இறைவனின் உவப்பயை
பெற்று,
நமது உடலில் நல்ல பயன்களையும் பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும்
உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் உள்ள Dr. ஹார் பெர்ட்
பென்சன் என்பவர்..
ஓய்வான மன நிலையில் இருக்கும் பொழுது நோய் எதிர் பாற்றல் மிக சிறப்பாக செயல் படுவதாகவும், இரத்த அழுத்தம், மூட்டுவலி, மூட்டு வீக்கம், போன்ற வலிகளால் பாதிப்பு முறைவதாகவும் தனது ஆய்வில் கூறியுள்ளதை
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோன்பின் நோக்கம்
எல்லா நேரத்திலும் அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வை நம் மனதில் பதிய வைத்து அல்லாஹ் விரும்புகின்ற காரியங்களை செய்யக்கூடியவர்களாகவும் அவன் வெறுக்கின்ற காரியங்களை விட்டு விலகி வாழ கூடியவர்களாகவும் நாம் மாற வேண்டும். இதற்காகவே அல்லாஹ் நோன்பை கடமையாக்கியுள்ளான்.
இதனை மனதில் கொண்டு
புனித ரமலான் மாத கடமைகளை நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் நம்
அனைவருக்கும் அருள் புரிவானாக.. ஆமீன்..