பேரீச்சம் பழம் ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் ஒரு உணவு பொருளாகத்தான் அதிகமான நபர்களால் நம்பபடுகின்றது .
பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகளை தெரிந்துக் கொண்டால் வருடம் முழுவதும் மட்டும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் எல்லோரும்உண்ண கூடியதாக அது மாறிவிடும்.
இதனுடைய அற்புதத்தை தெரிந்து கொண்டால் பிரபஞ்சத்தை படைத்து பரி பாளிக்கும் ஏக இறைவனின் ஆற்றலை எடுத்து காட்டும் சாட்சியாக அது இருக்கிறது. என்று சொன்னால் அதில் தப்பு ஒன்றும் இருக்காது.
.
இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்ற சக்திகள் நிறைந்துள்ளதாள் உடலுக்கு சுறுசுறுப்பை குடுத்து சோம்பேறி தனத்தை போக்கிறது.
இதில் நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள் ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமலும் இருக்கும்.
மலசிக்கலால் பாதிக்கப்பட்டவர். பேரிச்சம் பழத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீருடனே ஊறிய பேரிச்சம் பழத்தையும் சேர்த்து உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் மிக விரைவில் சரியாகிவிடும்.
அதனால் தான் நோன்பு காலத்தில் நோன்பாளிக்கு செரிமானம் தொடர்பான இடையூறுகள் இல்லாமல் இருக்க முடிகிறது
காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, போன்றவற்றையும் இந்த பழத்தால் பெற்று கொள்ள முடியும்..
இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் ஒருவரின் , இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது.
சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் பேரிச்சம் பழத்தில் உள்ளதால், நமது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
பேரீச்சம் பழத்துடன் பாதாம் சேர்த்து பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தியும் அதிகரித்து கை கால் தளர்ச்சிகளும் சரியாகும்
I Q குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினமும் 3 பேரிட்சை பழங்களை சாப்பிட வைத்தால் அதில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, குழந்தைகளின் அறிவாற்றல்,மற்றும் நினைவாற்றல் ஆகியவைகளை அதிகரிக்க செய்யும்.
சாதரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை எந்த வித நோயும் நெருக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நாம் ஆரோக்கியமாக வாழவும்,
வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்ற சக்திகளும் இந்த பழத்தில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்களின் விந்து விருத்திக்கு பேரிச்சம் பழத்துடன் மாட்டு பால் குடித்து வந்தால் தாது விருத்தியுண்டாகி நல்ல பலனை குடுக்கும்.
ஆண்களின் அந்தரங்க பலவீனங்களை போக்க இரவில் படுக்கும் போது சுத்தமான ஆட்டுப் பாலில் 7 பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர ஆண்களின் பலவீனங்கள் சரியாக்கப்பட்டு இல்லற வாழ்வில் மகிழ்ச்சியை
பெற முடியும்.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற . பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் விரைவில் இழந்த பலத்தை அவர்கள் பெறறிட முடியும்.
தினமும் இந்த பேரிச்சையை சாப்பிட்டு வந்தால் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு சக்தி பெறும்
ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது . இதனால் கழிவுகளோ நச்சுக்களோ நமது உடலில் தங்காது. அதனால் தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாமல் நாம் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது .
வைட்டமின் ‘ஏ’ குறைவானால் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.
* மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிரமம் படுபவர்கள் , பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவ்ருக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
மிகவும் எடை பலவீனம் உள்ளவர்களாகவும், வயதுக்கு தகுந்த சதை பிடிப்பு இல்லை என கவலை படுபவர்களும்,பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சதை பிடிப்புடன் குண்டாக மாற முடியும்.
ஆண் பெண் இருவருக்கும் முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமே உடலில் ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம் ஆகும்.
பேரிச்சம் பழத்தில் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதம் மற்றும் இரும்புச்சத்துகள் அதிகம் இருப்பதால் . தினமும் உட்கொண்டு வந்தால் முடி கொட்டுதல் பிரச்சினையை தடுக்க முடியும்
பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவைபடுகிறது. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் அவர்களுக்கு குறைகின்றன.
இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.
மெனோபாஸ் என்று சொல்ல படும் மாதவிலக்கு முழுமையடையும்.பெண்களின் எலும்புகள் பலவீனமாகி கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படாமல் இருக்கவும் பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
பெண்கள் கர்ப்பம் தரித்த பின் தினமும் 4 பேரிட்சைபலன்களை சாப்பிட்டால் வலியில்லாத பிரசவத்தையும் பிரசவத்திற்குப் பின் உண்டாகும் உடல் பருமனயும் குறைக்க முடியும்.
இப்படி பேரீச்சை பழங்கள் மட்டும் இல்லை அந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. அதன் அடிப்பாகத்தைக் குடைந்து மரப் பீப்பாய்கள் செய்துகொள்வார்கள், அரபுகள். (புகாரீ 1398)
அதன் தண்டுகளைத் தூண்களாக நிறுத்தி கூரை வேய்ந்து கொள்வார்கள். (புகாரீ 3585)
அதன் மட்டையைக் கைத்தடி ஆக்கிக்கொள்வார்கள். (புகாரீ 125)
ஈச்ச ஓலையில் பாய் நெய்வார்கள். அதன் நாரில் தலையணை செய்வார்கள். (புகாரீ 4913)
அதை நிரப்பி மெத்தை செய்வார்கள். (முஸ்லிம் 4229)
நாரில் கயிறு திரித்து தம் ஒட்டகத்துக்குக் கடிவாளம் போடுவார்கள். (புகாரீ 3355)
ரத்தம் கொட்டும் காயங்களுக்கு ஈச்சம் பாயை எரித்து அதன் சாம்பலையே மருந்தாகக் கட்டுப் போடுவார்கள். (புகாரீ)
இப்படி பல விதங்களில் பேரீச்சை
எல்லோருக்கும் பயன் அளித்தாலும்
சில முன்னெச்சரிக்கையும் உண்டு.
ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது
ஏனெனில் இதன் அதிகப்படியான நார்ச்சத்து குழந்தைகளின் குடலை பாதிக்கும் அபாயமும் உள்ளது.. என்றும் கூறுகின்றனர்.
நோன்பு திறக்க கிடைத்த ஒரு சிறு பழம் என்றோ ருசி நிறைந்த பழம் என்று மட்டும் எண்ணாமல் படைத்த ரப்பின் ஆற்றலை வெளிப்படுத்தும்
எண்ணற்ற பொருட்களில் இதுவும் ஒன்று என்று எண்ணி. மனதார இறைவனுக்கு நன்றி சொல்லி அதை அறியாத மற்றவர்களுக்கும் எடுத்து சொல்ல நாம் கடமை பட்டு இருக்கின்றோம். என்பதை இனிமேலாவது இன்ஷாஅல்லாஹ் உணர்ந்து வாழ்வோம்..
பேரீச்சம் பழத்தை தினமும் சுவைப்போம். ஏக இறைவனின் அற்புதங்களை எல்லோருக்கும் சொல்லி நேர்வழியின் பக்கம் மக்களை அழைப்போம். இன்ஷாஅல்லாஹ்.



