வருடத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் முக்கிய நிகழ்வுகள் பல இருந்தாலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் மிக முக்கியமான பல நாட்கள் இருந்தாலும்
நவம்பர் 11 தேசிய கல்வி தினம் என அனுசரிக்கப்படுவதை யாராலும்மறகக முடியாது.
காரணம் நமது தேசத்திற்கு கல்வியின் முதுகெலும்பாக திகழந்த மௌவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் தான் நவம்பர் 11 ஆகும்.
மௌலானா அவர்கள் இந்திய விடுதலை போராட்ட வீரராகவும். தேசத்தின் சிறந்த மார்க்க அறிஞராகவும், கள்வியாளராகவும் திகழ்ந்தவர்
சுதந்திர தேசத்தின் முதல் கல்வி அமைச்சராக 1947 முதல் 1958 வரை இருந்து அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் குறிப்பிடத்தக்கது
சுதந்திரம் பெற்ற இந்தியாவின் சிக்கல்களை சரியான முறையில் தீர்வு காண்பதற்க்காக கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்
அவர் தனது சேவையை கல்வியின் மூலம் செயல் படுத்தினார்.
1947 முதல் அவர் இந்த மண்ணுலகை விட்டு செல்லும் நாள் வரை திறம்பட பல பணிகளை தேசத்துக்கு செய்து அறிய சாதனைகள் புரிந்துள்ளார்.
அவர் தனது சிறு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்த, மார்க்கக் அறிஞராக இருந்தது மட்டுமில்லாமல் உலக கல்வியிலும் திறம்பட செயல்பட்டவர் என்பது குறிப்பிட தக்கது.
சுதந்திரம் பெரும் முன்பும்,1947 சுதந்திரம் பெற்ற காலகட்டத்திலும் இந்திய மக்களில் கல்வி கற்போர் சதவீதம் மிக மிக குறைவாகவே இருந்து வந்தது.
இதனை அதிகரிக்க அவர் பல விதமாகபாடுபட்டார். அதற்க்காக அவர் தான் கல்வி அமைச்சராக பணியாற்றிய காலத்தில பல நல்ல புதிய திட்டங்களையும் வகுத்து தந்துள்ளார்.
* சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வியை மாணவர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
* மத சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் கல்வி திட்டங்கள் இருக்க வேண்டும்.
* 14 வயது வரை தவராமலு அனைவருக்கும் இலவச கல்வி கொடுத்திட வேண்டும்.
* தொழில்கல்வி, வேளாண்கல்வி என மேலும் பல உயர்கல்வி கூடங்கள் நிறுவ வேண்டும் என பல பரிந்துரைகளை செய்தார்.
வெறும் பரிந்துரையோடு நின்று விடாமல் தன்னுடைய 11 ஆண்டு கால அமைச்சர் பதவியில் இருந்த காலத்தில் வருங்கால சந்ததிகள் நலனுக்காக மிக நீண்ட நெடிய தூரநோக்கு பார்வையுடன் செயல்பட்டார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மௌலானா அவர்களால் உருவாக்கப்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களும் கல்வி சாலைகளும். இன்றைக்கும் இந்தியாவை உலக அரங்கில் தலை நிிமிர்ந்து மின்னிட செய்கின்றன. என்பதைப் மறந்து விட கூடாது.
கலாசாரத்தை பாதுகாத்தால் தான் பாரம்பரியம் பாதுகாக்க படும் என்பதைப் புரிந்து தேசத்தின் பாரம்பரிய கலாச்சாரம் ஒரு போதும் அழிந்து விட கூடாது என்பதற்காக ‘லலித் கலா அகடமி
என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.
அவர் நமது தேசத்தின் தொழில் துறையை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் IIT,
அது போல பல்கலைக்கழக மானியக்குழு என்று அழைக்கப்படும் யுஜிசி என்ற அமைப்பை நிறுவியதும் இவரது சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டுசொல்லலாம்.
நாட்டில் ஆசிரியர் தினத்திற்கு கொடுக்கக்கூடிய கவனத்தை தேசிய கல்வி தினத்திற்கு அரசாங்கம் செலுத்துகிறதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது
செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஆசிரியர் தினத்தை நினைவில் வைத்துக் கொள்ளுகின்ற நாம் தேசிய கல்வி தினமான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினத்தை மனதில் வைத்திருக்கினறோமா?என்பது கேள்விக்குறியே !
நம் தேசம் சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்றி சுமுகமாக அனைத்தையும் பெற்றிட வேண்டும் என்றால் அனைவரும் கல்வியை பெற்றிட வேண்டும் என்பதுதான் மௌலானாவின் குறிக்கோள்.
அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற திட்டத்தை அரசு முன்னிலைப் படுத்தினாலும். அந்த கல்வியின் தரம்
மக்களிடையே உள்ள சமூக ஒற்றுமையை வலுப்பதினால் தவிர தேசியக் கல்வியின் தினம் வெறும் போலியான விளம்பர தினமாகவே போய்விடும் என்பது குறிப்பிட வேண்டும்.
அரசு 14 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி என்ற முறையை நடைமுறைப் படுத்தி வந்தாலும் அந்த கல்வியின் மூலமாக மக்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்வில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றதா என்பது எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
அறம் செய்ய விரும்பு என்கின்ற வாழ்வியலை மறந்துவிட்டு பணம் செய்ய விரும்பு என்கின்ற நோக்கத்தில் தான் கல்வி போதிக்க படுகிற வழக்கம்
இன்று நமது தேசத்தில் இருந்து வருவது
வேதனை படுவதாக மட்டும் இல்லாமல் அனைவரும் வெட்கம் பட கூடியதும் ஆகும்
கல்வி ஒரு நாட்டுக்கு முதுகெலும்பு.
ஒரு நாட்டின் தலைவிதி அந்த நாட்டின் கல்விக் கூடங்களில் தான் நிர்ணயிக்கப்படுகிறது என்ற கோத்தாரி கமிஷனின் அறிக்கை
வெறும் வர்ணஜால வார்த்தையாகவே
இருக்கிறது.
எல்கேஜி முதல் காலேஜ் வரை கல்வி
ஒரு விற்பனைப் பொருளாக ஆகிக்கொண்டிருக்கிறது.
அதனை மாற்றி மௌவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இலட்சியத்தை நினைவாக்க அறம் நிறைந்த கல்வியை பள்ளியில் போதிப்பதற்கு அரசு திட்டங்கள் வகுத்திட வேண்டும்.
சமூக ஒற்றுமையின் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவரும் தேசம் என்ற ஒரே குடையின் கீழ் வாழ்கின்ற மக்கள் என்கின்ற எண்ணத்தை நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
தேச மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே ரத்தம் என்ற கொள்கையில் வாழ்வதற்கு கல்வியை ஒரு கருவியாக பயன் படுத்திட வேண்டும்.
அது தான் அவருக்குப் நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.