ஒவ்வாமை உள்ளவர்கள் இளநீரினைத் தவிர்க்கவும்.உடலில்
அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் ,உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மாத்திரைகளை எடுத்து கொள்பவர்கள் மற்றும்
சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும்.
மருந்துகள் தொடர்ந்து எடுத்து கொள்பவர்களும், கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் பெண்களும் மருத்துவரை கலந்த ஆலோசித்த பின் இளநீரை அருந்துவது நல்லது.
இறைவன் தனது வேதத்தில்
நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்:13:4.) என்று குறிப்பிட்ட
வசனத்தை நாமும் சிந்தித்து பார்ப்போம்.
அவனின் படைப்பின் அறுமைகளை தெரிந்து கொள்வது மட்டுமில்லாமல், அகிலங்களை படைத்துப் பாதுகாக்கும் ஏக இறைவனின் அருமை பெருமைகளை தெரிந்து வாழ்வோம். இன்ஷா அல்லாஹ்.,