Categories
articles

அருமை தெரியுமா? ஆரோக்கியத்தின் அருமை . அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாதத்தில் ஒரு நாளோ வருடத்தில் ஒருநாளோ
பார்வையாளராய்
கண் திறந்து சென்று வாருங்கள் .

ஆரோக்கியத்தின் அருமை அப்பொழுது தான்
உங்களுக்கு தெரிய வரும்.

படித்தால் தெரியாதது சொன்னாலும் புரியாதது, ஆரோக்கியத்தின் அருமை! அதை யாருக்கும் யாராலும் புரிய வைக்கவும் முடியாது

கண்ணீரின் வலிமை,
பார்த்தவுடன் கண்களில் தெரிவது போல்
கதறுகின்ற
அழுகைகளின்
அருமை மூலம்
ஆரோக்கியத்தின் அருமை
காதுகளுக்கும் தெரிய வரும்,

கல் நெஞ்சம் கூட கரைந்து விடும் கதறுகின்ற
ஓலங்களை கேட்கும் பொழுது.
பார்க்கின்ற கண்களுக்கு மட்டுமில்லை, பார்வை இழந்த
வருக்கும் தெரிந்து விடும் ஆரோக்கியத்தின் அருமை.

கேட்டாலும் திருந்தாதது,
பார்த்தாலும் திருந்தாதது
பட்டு தான் திருந்தி விடும் என்பது பொய்யாகி பார்த்தாலே திருந்தி விடும்
என்ற புது மொழி பிறந்து விடும்.

ஆரோக்கியத்தின் அருமை தெரியவேண்டுமா
அருகில் உள்ள அரசு மருத்துவமனைககு
சென்று வாருங்கள்.

அடுத்த வேலை உணவுக்காக அலைபவனும், அடுக்கு மாடி மாளிகையில் வாழ்பவனும்,
கதருகின்ற சத்தம்
கேட்கும் பொழுது ஆரோக்கியத்தின்
அருமை தெரிந்துவிடும்.

அறிவுரையால் அடங்காதது கூட அலறுகின்ற சத்தம் கேட்கும் பொழுது ஆரோக்கியத்தின் அருமை புரிந்துவிடும்.

அன்பு பண்பு பாசம் இவைகளை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும்
யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது
என்பது தெரியவரும்..

நேசதுடன்
எம். நூருல் அமீன்.
சென்னை.1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Calendar

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Recent Comments