Dr. எம். நூருல் அமீன்.
எங்களுக்கு மட்டுமே சொந்தம் என எந்த உணவுகளையும் எந்த நாட்டை சேர்ந்தவர்களாலும் சொல்லி உரிமை கொள்ள முடியாத பொருட்களில் சாப்பாட்டு விசயங்களையும் சேர்த்தே சொல்லாம்.
காரணம் சாப்பிடுவதும் சமைப்பதும் காலகாலமாக மாறி கொண்டே உள்ளது.
அப்படி பல வகைகளில் பல நாடுகளில் மாறி மாறி இன்றும் இருப்பது தான் உருளைக்கிழங்கு.
உருளைக்கிழங்கு நல்லதா கெட்டதா என்ற பட்டி மன்றம் நடந்தால் கூட ஆச்சரியம் இல்லை. அவ்வளவு கருத்து பரிமாற்றங்கள் நம்மிடம்
இருந்து கொண்டே உள்ளது.
வாயு தொல்லையும்,உடல் பருமனையும் உருவாக்கும், வயிற்று வலி, வயிறு உப்புசம், ஏற்படுத்தும் என அறிவியலால் நிரூபிக்க முடியாத அளவுக்கு அனுபவங்களால் இந்த கிழங்கின் மீது பலர் பல விதமாக சொன்னாலும் ,
உருளைக்கிழங்கு சாம்பார் இருக்கிறது என்றாலும், பூரி மசாலா என்றாலும் அது சந்தோசமான சமாசாரமாகவே எல்லோருக்கும் இருக்கும்.
விடுமுறை நாட்களில் ஆர
அமர பூரி மசாலா சாப்பிட்டு காஃபி சாப்பிடுவதிலும், மழை காலம் மற்றும் குளிர் காலங்களில் கிழங்கு போண்டா சாப்பிடும் சந்தோசம்
யாராலும் சொல்லாமல் இருக்க முடியாது.
வெறும் ருசிக்கு சாப்பிடும் வகையாக இல்லாமல்,
உருளைக்கிழங்கில் மருத்துவ குணமும் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் அதை வேக வைத்து சாப்பிடும் போது தான் கிடைக்கிறது என
“உணவியல் நிபுணர்கள்” மல்லுகட்டிச் சொல்லிக்
கொண்டு இருக்கின்றனர்.
உருளைக்கிழங்கு நல்லது தானே அதை எப்படிச் சாப்பிட்டால் என்ன? என எண்ணெய்யில் வித விதமான வகைகளில் பொரித்து சாப்பிட்டு தல்லுபவர்களும்
உலகின் பல பகுதிகளில் வாழ தான் செய்கின்றனர்.
மிக மெல்லியதாக நறுக்கி, அதற்கு பிரெஞ்ச் கட் ,பிரெஞ்ச் பிரைஸ், லேஸ், பொட்டெட்டோ சிப்ஸ், ரோஸ்ட், கட்லெட, சமோசா, ஆலுடிக்கா, ஆலு பரோட்டா, ஆலு போண்டா, ஆலு பக்கோடா என நாட்டுக்கு நாடு தங்களுக்கு பிடித்த பெயர் வைத்து நடுத்தர மக்களை கவருவதற்காக கலர் கலராக விளம்பரங்களை வெளியிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் சந்தை படுத்தி பல கோடிகளில் சம்பாரித்து கொண்டும் இருக்கிறது.
ஆனால் அப்படி உண்ணும் பொழுது அதனால் பல நோய்கள் உருவாகும் என்ற கருத்தும், அந்த உணவுகளால்
எந்த பலனும் இல்லை என்றும்
சொல்பவர்களும் உண்டு.
.
உருளைக்கிழங்கு
உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உணவாக மட்டுமில்லாமல். எல்லோரின் விருப்பமான உணவு பட்டியலிலும் முதல் பத்து இடங்களிலும் இடம் பிடித்து இருக்கிறது.
வறட்சி காலத்தில் மக்களின் பசியை போக்கவும், பன்றிகளுக்கும்
கைதிகளுக்கும் மட்டுமே அது ஒரு காலத்தில் உணவாக இது இருந்ததாகவும் சொல்ல படுவதுண்டு.
உண்ணும் உணவானாலும் உண்ண வேண்டிய முறையில் உண்ணாவிட்டால் அதுவும் நோய்க்கு காரணமாகி விடும்
என்றும் இன்று மாறிவரும் உணவுப் பழக்கங்களும் அவர்களுக்கு நோய் வர காரணம் என்பதைப் யாராலும் மறுக்க முடியாது.
புரதம், கொழுப்பு நார்ச்சத்து, மாவு சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், நியாசின், வைட்டமின், மெக்னீசயம், சோடியம்,பொட்டாசியம், தாமிரம்,கந்தகம், குளோரின், என பல வித சத்துக்களை உருளைக்கிழங்கு கொண்டு உள்ளது.
கிழங்கு மட்டுமில்லாமல்,
நாள் பட்ட இருமல்உள்ளவர்கள் உருளைக்கிழங்கு செடியின் இலைகளின் சாரை உண்டு வந்தால் நாள்பட்ட இருமல் சரியாகும்.
இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் பசி தீருவது மட்டுமில்லாமல்
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் போன்றவைகளும்,
சொறி சிரங்கு, போன்ற தோல் நோய்களும் , தாய்மார்களுக்கு நன்றாய் பால் சுரக்கவும், சிறுநீர் குறைவாய் பொகுபவர்களுக்கு, சிறு நீரை அதிகரிக்கவும், உடல் மிகவும் பலவீனமாக உள்ளவர்கள் கிழங்கை வேக வைத்து நெய்யில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் அதற்கும் பலன் கிடைக்கும் என்றும்,
தீயினால் உண்டான புண்களுக்கு வெந்நீரில் அரைத்து பசைபோல் பற்று போட்டு வந்தால் தீ காயங்களும் ஆறும்.
பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்தது அதனுடன் தேன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும்.
மேலும் இது பரு மற்றும் சருமத்த்தில்வுள்ள புள்ளிகளையும் குணப்படுத்த உதவும். என்ற குறிப்புகளும் உள்ளன.
கல்கத்தாவில் இருந்த
ஏழைகள், மாமிசம் வாங்கி உண்ண கடுபடியாகாது என்பதால் அதற்கு பதிலாக உருளைக்கிழங்கை பிரியாணியில் சரிக்கு சமமாக பயன் படுத்துகிறார்களாம்.
அது போல் பாக்கிஸ்தான் பிரியாணியிலும் உருளைக்கிழங்கு அதிகமாக இருக்குமாம்.
போர்ச்சுகீசியர் களின் வருகையின் போது தான் நமது நாட்டுக்கு இந்த கிழங்கு அறிமுகம் ஆனது என்றும், சூரத் பகுதியில் தான் முதன்முதலாக அது பயிரிட ப்பட்டது என்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார். ஆனால் சீனர்களின் மூலமாக நம் நாட்டில் அறிமுகம் ஆனது என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குளிர் பகுதிகளில் இது அதிகமாக பயிரிட படுகிறது
தமிழகத்தில் நீலகிரி,கிருஷ்ணகிரி, ஈரோடு பகுதிகளில் இது அதிகமாக விளைவிக்க படுகிறது.
அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படுவது இந்த உருளைக்கிழங்கு.
இதில் வைட்டமின் C மற்றும் கரோடின் சத்துகள் நிறைந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஸ்கர்வி நோய் வருவதை தடுக்கிறது.
உடலில் இரத்த அழுத்த குறைபாடுகளை தடுக்கிறது.
நமது மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. மேலும் இதில் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
புற்றுநோய் வருவதை தடுக்கக்கூடிய உணவு பொருளாக இது உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருப்பதால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
ஆனால் முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
காரணம் முளைவிட்ட உருளைக்கிழங்கில் அதிக நச்சுக்கள் அடங்கியுள்ளன. அதனால் நம் குடல் பாதையில் எரிச்சலை உண்டாக்கி குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகலும் ஏற்படும்.
முளைவிட்ட உருளைக்கிழங்கை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். காரணம், கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற
கருத்தும் உண்டு.
எண்ணெயில் வறுத்த, பொரித்து எடுத்தவைகளையும்
பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வைகளையும் தவிர்த்து கொள்வது நல்லது.
உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள்.
அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன.
இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக கிழங்கு மாறிவிடும், வாந்தி, குமட்டல், போன்ற உடல்நல பாதிப்பு அதை சாப்பிடுவதால்
ஏற்பட்டு விடும்.
எனவே…. உணவு பொருட்கள்
ருசிக்கானது என்று நினைக்காமல்…. நம் வீட்டில் உள்ள எல்லாரும் நலமுடன் வாழ ஏக இறைவன் அருளிய உணவுகளை முறையாக உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.. இன்ஷா அல்லாஹ்…..மகிழ்ச்சியாக இருப்போம்.



