Categories
articles

நாவல் பழம்.
++++++++++++
பழங்களில் நாவல் பழம் அழகானது. அதன் நிறம் கரு நீலமாகவும்,அதன் அளவு சிறியதாகவும்,
விலையிலும் கூட குறைந்த விலையில் கிடைக்க கூடியது.
ஆனால் பயன் என பட்டியல் இட்டால் அது பெரியது.

நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்.

நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்’ என திருக்குர்ஆன் 2:172 கூறுகிறது.

எனவே நாம் நமக்கு கிடைத்தவைகளுக்காக, படைத்தவனுக்கு
நன்றி சொல்லு வதற்கு மறக்க கூடாது.

உடலுக்கு நலம் தருகின்ற பல பழங்களில், நாவல் பழமும் ஓன்று.

கோடை காலத்தில் சாதரணமாக தள்ளுவண்டியிலும், தெரு ஓர கடைகளிலும் கிடைக்கும் இந்த நாவல் பழம். சாதரணமாக நாக பழம் என்றும், நகா பழம் என்றும் சொல்ல படுவதுண்டு.

கோடை கால பழங்கள் யாவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும்.

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவையும் கொண்ட இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். ஒவ்வாமையால் ஆஸ்துமா எனப்படும் நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படும். மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமலும் ஏற்படும். இவர்கள் நாவல் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் கடுமை தன்மை குறைந்து ஜுரத்தினால் ஏற்பட்டிருக்கும் வறட்டு இருமலையும் போக்கி சுவாச பிரச்சனைகள் இல்லாமல் போகும்.

துவர்ப்புச் சுவையையும் கொண்டுள்ள இந்த பழம் நம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் செய்யும்.

இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி அவைகளை சிறுநீர் மூலம்
வெளியேற்றி, சிறுநீரகக் கற்கள் கரையவும்,
சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்து. மண்ணீரல் கோளாறுகளையும் சரி செய்யவும் உதவுகிறது.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அவர்களின் மூல நோயின் தாக்கம் குறைந்து மலச்சிக்கலை சரியாக்கும். சீதபேதி எனப்படும் கடுமையான வயிற்று போக்கு சமயங்களில் நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கை நிறுத்தி வயிற்றில் தங்கியிருக்கும் நச்சுகள், கிருமிகள் ஆகியவற்றை வெளியேற்றி,

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். வறண்டு போன உடலில் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைத்து, உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., கருப்பையில் சினை முட்டைகள் வளர்ச்சி பெறாமல் இருப்பது, கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவற்றின் காரணமாக உண்டாகும் மலட்டுத்தன்மை ஆகியவற்றை நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டு தன்மையை சரீயாக்கும்.

இந்த பழம் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் உண்டாகும் பிரச்சனைகளை தடுக்கும்.

ஒரு சிலருக்கு தங்களின் சருமத்தில் வெள்ளை நிற புள்ளிகள் ஏற்படும். இவர்கள் தினமும் நாவல்பழங்களை சாப்பிட்டு வந்தால் தங்களின் உடலில் தோலின் நிறத்தை மேம்படுத்தி மெலனின் என்கிற புரத சத்தை அதிகம் ஊக்குவித்து தோலில் ஏற்பட்டிருக்கும் வெள்ளை புள்ளிகளை மறைய செய்யும். தோலின் பளபளப்பு தன்மைகளையும் சரி செய்யும்.

ஒரு சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் வீக்கம் ஏற்படுகிறது. இவற்றை களைவதில் நாவல் பழம் சிறப்பாக செயல்படுகிறது.

எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

குறிப்பு.

பழத்தை சாப்பிடும் முன் பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்தல் வேண்டும் .

பழங்கள் சாப்பிட்டவுடன் குறைந்தது சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்துவது சிறந்தது இல்லை என்றால் சரியாக ஜீரணிக்கப்படாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும் இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து,வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்;

(உண்மைகளையெல்லாம் ) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள் என்கின்ற திருகுரான்(2.22)வசனத்தை நினைவு கூர்ந்து,
படைத்தவனுக்கு நிகராக இணைகளை வைக்காமல் நமக்காக படைத்த பிரபஞ்சத்தின் அதிபதிக்கு கடமைகள் செய்து நன்றி மறவாதவர்களாக வாழுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Calendar

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Recent Comments