Categories
articles

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துளள மருந்தில்லா மருததுவ முறைகள் 100க்கும் மேற்ப்பட்ட சிகிச்சை முறைகளாக உள்ளன.

அதில் ஒன்று பாத அழுத்த சிகிச்சை என்னும் Foot reflexology யாகும்.

Reflexology என்னும் பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நமது பாதத்தில் சரியான முறையில் அழுத்த முறையில் மசாஜ் செய்வதன் மூலம் உடலின் நரம்புகள் தூண்டப்பட்டு மனமும் புத்துணர்ச்சி பெற்று.உடலின் ரத்த ஓட்டமும் சீராகீ நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.

பண்டைய காலம் முதல் இன்றைய நாட்கள் வரை பாதங்களில் செய்யப்படும் மசாஜுக்கு அதிக முக்கியத்துவம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதங்களில் சரியான புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யும்போது இதயம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் பலப்பட்டு நோய்கள் குணமாகிறது.

கழுத்து வலி, சோர்வு,மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து உடனடியாக நிவாரணமும் கிடைக்கிறது.

*பாத மசாஜ் மூலம் கிடைக்கும் முக்கியமான நன்மைகளை சுருக்கமாக பார்ப்போம்.

ரத்த ஓட்டம் அதிகரித்தல்.
++++++++++++++++. பாதங்களில் மசாஜ் செய்வது நம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டிவிடும்.

குறிப்பாக பாதத்தின் நுனி பகுதிகளில் மசாஜ் செய்யும்போது உடல்புத்துணர்ச்சியை உணரும். தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரும். பதற்றம், மன அழுத்தம் குறையும்.

மன நலம்:
+++++++++

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பல்வேறு அசவுகரியங்களை எதிர்கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதால், மனநலனிலும் ஓரளவு நெருக்கடி தோன்றும். பாதத்தின் கட்டை விரலை அழுத்தி மசாஜ் செய்தால் இதற்கு நிவாரணம் கிடைக்கும். மனநலம் அமைதிப் பெரும்.

பெண்கள் வீக்கம், வலி போன்றவைகளால் அதிகமாக அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் பாத மசாஜ் செய்யும்போது வளர்சிதை மாற்றம் மேம்படும். அதனால் உடலின் வீக்கம், வலிகள் யாவும் குறையும்.

உற்சாகம்:
+++++++++
சோம்பல், தசை பலவீனம், உற்சாகமின்மையால் அவதிப்படுகிறவர்கள் பாத மசாஜ் செய்தால் உற்சாகத்தை கட்டாயம் பெற்று சுறுசுறுப்புடன் செயல்படலாம்.

தலைவலி
++++++++++

கழுத்து மற்றும் தோள்களில் ஏற்படும் வலி, தலையின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் ஏற்படும் வலிகளை போக்கவும் பாத மசாஜ் துணைபுரியும். கால் விரல்களின் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வந்தால் வலிகள் குறைந்து நல்ல மாற்றத்தை உணரலாம்.

புத்துணர்ச்சி
+++++++++++++

நமது கால்களில் எண்ணற்ற நரம்பு முடிச்சுகள் உள்ளன. அவைகள் முதுகுத் தண்டுவடத்துடன் தொடர்புடையவை.

வட்ட இயக்க முறையில் விரல்களை அழுத்தி தேய்த்து 30-45 விநாடிகள் பாதத்தில் மசாஜ் செய்து வந்தால் முதுகு தண்டுவடத்தில் உள்ள வலிகள் குறைந்து ஆரோக்கியமான புத்துணர்ச்சி பெறலாம்.

இந்த பாத அழுத்த சிகிச்சை முறை செய்யும் பொழுது பாதவெடிப்பு பிரச்சனைகள் இருக்காமல் இருந்தால் மிகவும் நல்லது.

பாத வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள்*

. குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலையும் உருவாகிறது.

பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் இந்த வெடிப்பு ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம்.

நமது சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றை கீழ்வருமாறு காணலாம்:

ஈரப்பதம் குறைவினாலும்
வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைபாடுகளாலும்
நீண்ட நேரம் நிற்பதாலும்
சொறி சிரங்கு தைராய்டு, நீரிழிவு
போன்றவைகளாலும்,மரபியல் உடற்பருமன்போன்ற காரங்களாலும், உண்டாகும்.

இவ்வாறான பாத வெடிப்பு ஏற்படாமல் இருக்க

கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும்.
தேவையான அளவுக்கு நீரில் மவுத்வாஷை கலந்து, 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.

வாழைப்பழம்:

வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

தேன்:

இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சியு ம் ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 30 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும்.

இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விட பாத வெடிப்பு சரியாகும்.

கற்றாழை:

இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி. காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.

சமையல் சோடா:

சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 30 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாதங்கள் வெடிப்பு இல்லாமல் அழகாக இருக்கும்.

Dr.M. நூருல் அமீன்
சென்னை.1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Calendar

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Categories

Recent Comments