தண்ணீர், மோர்.
—————————–
எடுத்துக்கொள்வோம்.
ஒன்ஸ்மோர்….
பருவங்கள் பலதை கடந்து வாழ கூடியவர்களாக நம்மை படைத்த பிரபஞ்சத்தின் அதிபதி.
அந்த பருவ கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் உண்ணும் உணவுகளையும் படைத்து இருப்பதை நாம் சிந்தித்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அடியார்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாக.
பருவ காலங்களில் ஒன்றான கோடை காலங்களில் பல்வேறு சங்கடங்களை அனுபவிப்பவர்களாக, வலிந்து வரும் வியர்வையை துடைத்து கொண்டும், வறண்டு போகும் நாக்கு வறட்சியுடனும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில், வசதியுள்ளவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப கலர்கலராக பல வித பானங்களை குளிர் பொங்க, பொங்க தமது தாகத்தை பருகி தீர்த்து கொள்கிறனர்.
ஆனால் அன்றாட தேவைகளுக்கு அல்லல் படுகின்ற பாமர மக்கள்
தங்களின் சூழ்நிலைகளுக்கு,
ஏற்றார் போல, வசதிக்கு முடிந்தது போல கிடைக்கின்றவைகளை கொண்டு வாட்டி வதைக்கும் தாகத்தை தீர்த்து கொள்கின்றனர்.
இன்று பல விதங்களில் விற்கப்படும்
குளிர் பானங்களில் அதிக சர்க்கரையும் பல வேதி பொருட்களும் சேர்க்கப்படுவதால்
அதை அதிகமாக பருகின்ற வர்களுக்கு அவர்களின் எலும்புகளின் வலுவை குறைத்து ஆஸ்டியோபோரசிஸ், நீரிழிவு போன்ற பல நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அன்றாட தேவைகளுக்கு கூட அல்லல்பட்டு,
வயலில் வாடும் விவசாயிகளுக்கும்
பாமர மக்களை வாட்டி வதைக்கும் தாகத்திற்க்கும் சேர்த்தே தீர்வு தர கூடியவன் அல்லவா
“உலகை காக்கும் ரப்பில் ஆலமீன்”.
அணு முதல் அகிலங்களி்ல் உள்ள மொத்த அனைத்தையும் படைத்தவன் எல்லா காலத்திற்கு ஏற்றவைகளையும், தேவை படுகின்ற உணவுகளையும், படைக்காமல்லா விட்டு விடுவான்?.
“நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
தண்ணீரின் அருமை தாகத்தில் தெரியும்”
என்பதை நினைத்து பார்த்தோமேயானால் சாதாரணமாக இருப்பவைகள் கூட சந்தோசம் தந்திட முடியும் என்பதை
புரிந்துகொள்ள முடியும்.
எவ்வளவு கொடிய கோடை நாட்களையும் அதனால் உண்டாகும் சிரமங்களையும் நம்மிடம், தண்ணீர் இருந்தால் சமாளித்து விட முடியும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இருக்காது.
“தண்ணீர்” இறைவனின் பல அருள் கொடைகளில் ஓன்று என்பதில் யாருக்கும் சந்தேகமும் இருக்காது.
வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் அருந்த கூடியவர்களாக தான் எல்லோரும் இருக்கின்றோம்.
தவறும் பட்சத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் பருகிட வேண்டியது இந்த காலங்களில் அவசியமானது.
வெயில் காலத்தில் அதிகமான நபர்களுக்கு நீர்க்கடுப்பு, நீர் சுருக்கு போன்ற கஷ்டங்கள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் இந்த காலத்தில் தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் தான்.
. தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லை என்றால் அது பல விதங்களில்
இடையூராக மாறிவிடும்.
தண்ணீரின் அளவையோ, திரவ உணவுகளை உட்கொள்வதையோ குறைத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
அது மட்டுல்லாமல்,
உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறி உடல் வறட்சி ஏற்பட்டு ,
. அதன் காரணமாக, சிலருக்கு தலைச்சுற்றலும் ஏற்படும்.
வாய் வறண்டு வாயில் போதுமான அளவு உமிழ் நீர் சுரக்காமல். வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து வாய் துர்நாற்றத்துடன் இருக்கவும் கூடும்.
உடலில் அதிக வெப்பம் உண்டாகி காய்ச்சல் ஏற்படுவதும். தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலிகளையும் எதிர்கொள்ளவும் நேரிடும்.
இவ்வாறான சங்கடங்களை போக்குவதற்கு
எங்கும் எப்போதும் கிடைத்து கொண்டு இருக்கும்
“தண்ணீரை ” தேவையான அளவு எடுத்து கொண்டால் சுட்டெரிக்கும் கோடை கால
சங்கடங்கள் இல்லாமல் எல்லாரும் வாழ்ந்திட முடியும்.
நம் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சென்று மூளை, நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கு நாம் அருந்துகின்ற தண்ணீர் தான் மிக அடித்தலமானதக இருக்கின்றது..
உடலை கோடையில் குளிர்ச்சியாக வைக்க, களைப்பை தவிர்க்க, உடலின் தசைகள் நன்கு இயங்க, சுலபமான ரத்த ஓட்டத்திற்கு மற்றும் மூளை துடிப்புடன் செயல்பட, போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும்..
இதுவே ஆரோக்கியமாக வாழ வழியாகும் என்பது மருத்துவ உலகம் சொல்லும் ஒரு வழிமுறையாகும்.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் மூளையின் செயல்பாடுகள் பாதிக்க பட்டு. அதனால் தலைவலி போன்ற பல பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு ஆகின்றது.
உடலுக்கு தேவைப்படும் அளவிற்கு
தண்ணீரை பருகுவது மிகவும் நல்லது. தண்ணீரில் ஹைட்ரஜனின் 2 பங்கும், ஆக்ஸிஜனின் ஒரு பங்கும் இருக்கிறது.
இதை வேதியியல் ரீதியாக H₂O என குறிப்பிடுகிறோம். தண்ணீர்…..தாகதை மட்டும் தீர்க்கும் ஒரு திரவம் என நினைக்க வேண்டாம்.
அது இந்த பிரபஞ்சம் செளிப்படைய, அதில் வாழும் அனைத்து வகை ஜீவ ராசிகள்
வாழ்வதற்கு அடிப்படையான இறைவனின் அருட் கொடையாகும்.
செரிமானம் ஆவதற்கு மட்டுமில்லாமல், நமது சுவாசத்திர்க்கும், மூட்டுக்களின் உராய்வுகளுக்கும், ஊட்டச்சத்துக்களுக்கும், என பல விதங்களில் தண்ணீர் பயன்படுகிறது .
அப்படிப்பட்ட தண்ணீரை
கோடை நாட்களில் தவறாமல் அதிகமான அளவு அருந்த வேணடும்.
கோடை காலத்தில் தண்ணீருக்கு பதிலாக
நாம் அதிகமாக அருந்தப்பட வேண்டிய பானம் எது என்றால் அது மோராக இருக்க வேண்டும்.
கவர்ச்சியாகவும், கலர் கலராகவும் உலா வரும் குளிர் பானங்களை அருந்துவதை தவிர்த்து கொள்வது சிறந்தது.
எளிமையான மோரில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
அதனை அருந்துவது நமக்கு பல நன்மைகளை தருகின்றது.
மோரில் பயோ ஆக்டிவ், புரோட்டின், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் போன்ற பொருட்கள் நிறைந்துள்ளது
மோரில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம் ,
புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் ,.
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது..
மோரில் குறைந்த கொழுப்புச்சத்து இருப்பதால்.
செரிமானத்திற்கும்
உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும்
வயிற்று போக்கை சரி செய்யவும் உதவுகிறது.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மோரை தினமும் குடித்தால்,
இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வாய்புன் உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும்.
மூல நோய்க்கு சாப்பாட்டுடன் மோரை இரண்டு வேளை சாப்பிட்டுவர அதனின் தீவிரமும் குறையும்.
சிலருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஓத்து கொள்ளாது.
அதனால் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உண்ணாமலியே இருப்பார்கள்.
இப்படி உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இவர்கள் மோரினை குடிப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தை பெற்றிட முடியும்.
நெஞ்செரிச்சல் என்ற அசிடிட்டியை குணப்படுத்த மோர் சிறந்த மருந்து.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் , ஏற்படும் வயிற்று வலி, மற்றும் அதிக இரத்தப்போக்கிற்கு ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்து குடித்தால் போதுமானது. மேற்படி சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமின்றி பல உபாதைகளும் சரியாகும்.
இப்படி சுட்டெரிக்கும் வெயிலை தண்ணீரை கொண்டும், மோரை கொண்டும் மிக சுலபமான முறை கொண்டு எளிதில் சமாளிக்கலாம்.
ஏனெனில்.,
இறைவன் அவரவர் சக்தியை மீறி சோதிப்பதில்லை என்பதை முழு மனதுடன் நம்பி நம்பிக்கையுடன் வாழ்வோம்.
இறைவன் மிக மிக பெரியவன்.
இன்ஷா அல்லாஹ் தொடர் தொடரும்…..,
Dr. எம். நூருல் அமீன்.



